விரைவில் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ 800

By செய்திப்பிரிவு

தலைப்பைப் படித்துவிட்டு, கட்டுரையில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தைப் பார்த்தால், நிச்சயம் குழப்பம் வரும். மாருதி சுஸுகி ஆல்டோவைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, வேறு இறக்குமதி செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை தவறுதலாக வைத்துவிட்டதாக நினைக்கத் தோன்றும். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். விரைவில் சந்தைக்கு வர உள்ள ஆல்டோ 800 பல்வேறு சிறப்பம்சங்களுடன் வர உள்ளது.

மாருதி இக்னிஸ், பலேனோ, விடாரா பிரீஸா ஆகிய மாடல் அறிமுகத்தைத் தொடர்ந்து முற்றிலும் புதிய வடிவமைப்புடன் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆல்டோ 800-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது மாருதி சுஸுகி.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆரம்ப நிலை ஹாட்ச்பேக் மாடல் கார்களை ஒரு சில குறிப்பிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களே தயாரித்து வந்தன. பிறகு இதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்தன. இத்தகைய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியதைத் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரை அறிமுகம் செய்ததன் மூலம் அந்த சந்தையைக் கைப்பற்றியது. அதுவரை ஹாட்ச்பேக் மாடலில் கோலோச்சி வந்த மாருதி சுஸுகி சாம்ராஜ்யத்தை க்விட் வரவு அசைத்துப் பார்த்தது.

சிறிய ரகக் கார்களில் மாருதி சுஸுகி மீதான நம்பகத்தன்மை, அதன் உதிரி பாகங்கள் கட்டுபடியாகும் விலையில் கிடைப்பது ஆகியவற்றின் காரணமாக அது கோலோச்சி வந்தது. ரெனால்ட் க்விட் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்ததால் மாருதி ஆல்டோவின் சந்தை சரியத் தொடங்கியது.

இதிலிருந்து மீண்டு திரும்பவும் முதலிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது மாருதி சுஸுகி. அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ-வில் தனது புதிய மாடல் ஆல்டோ800-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரிவில் கடும் போட்டியாகத் திகழும் ரெனால்ட் க்விட் மாடலுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது இருக்கும்.

வடிவமைப்பு, இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை மாறு படும். இப்போது உள்ள ஆல்டோ 800-ல் சிங்கிள்-டிஐஎன் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இதற்குப் பதிலாக மீடியா என்ஏவி இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். பாதுகாப்பு அம்சங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்துக் கொள்ளப்படாத வகையில் அதேசமயம் இலகுவானதாக இது இருக்கும்.

ஏபிஎஸ் எனப்படும் பிரேக்கிங் சிஸ்டம், மற்றும் இரண்டு உயிர் காக்கும் ஏர் பேக் உள்ளிட்டவை இதில் இருக்கும். அனைத்துக்கும் மேலாக இதில் இரண்டு கதவுகள் மட்டுமே இருக்கும். ஆனால் நான்கு பேர் சவுகரியமாக பயணிக்கலாம். முன் இருக்கைகள் நகரும் தன்மை கொண்டதாக இருக்கும். பாரத்-VI புகை மாசு கட்டுப்பாட்டு விதிமுறைக் குள்பட்டு தயாரிக்கப்பட்டதாக இது இருக்கும்.

தோற்றப் பொலிவிலேயே மிகச் சிறப்பாக இருக்கும் புதிய ஆல்டோ 800, விரைவில் இந்தப் பிரிவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

க்ரைம்

9 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்