வித்தியாசமான ‘வாட்டர் டாக்ஸி’!

By செய்திப்பிரிவு

பிரான்சைச் சேர்ந்த சீ பபுள்ஸ் எனும் நிறுவனம் விரைவிலேயே வாட்டர் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது. ரைன் ஆற்றில் இத்தகைய வித்தியாசமான படகு போக்குவரத்து சேவையை இந்நிறுவனம் தொடங்க உள்ளது. இந்நிறுவனத்தை உருவாக்கிய ஆண்டர்ஸ் பிரிங்டால் மற்றும் தெபோல்ட் ஆகிய இருவருமே கடல் பயண பிரியர்களாவர். 2009-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் வடிவமைத்த அதிவேக படகு முதல் பரிசை வென்றது.

பிரான்ஸ் நகர மேயர் ஆனே ஹிடால்கோ மாசில்லா சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறார். அவர் பேட்டரியால் இயங்கும் படகு சேவையை ஊக்குவித்ததாக ஆண்டர்ஸ் கூறுகிறார்.

வழக்கமான படகுகள் போலன்றி இது முட்டை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் மேற்பரப்பில் செல்வது போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பயணிக்க முடியும்.

படகை செலுத்தும் ஒருவர் தவிர்த்து 4 பயணிகள் இதில் பயணிக்கலாம். இது முற்றிலும் மூடப்பட்டிருப்பதால் தண்ணீர் உள்ளே தெறிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. இதன் கீழ்ப் பகுதியில் உள்ள புரொபல்லர் படகை செலுத்துகிறது.

இந்தத் திட்டப் பணிக்கு 5.5 லட்சம் டாலரைத் திரட்டியுள்ளது சீபபுள்ஸ் நிறுவனம். இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனர்களில் ஆளில்லா விமானங்களை (டுரோன்) உருவாக்கிய பாரோட் எஸ்ஏ பார்டெக் நிறுவனமும் ஒன்றாகும். இது தவிர பிரெஞ்சு அரசின் ஆதரவிலான பிபிஐ நிதியமும் இதில் முதலீடு செய்துள்ளது.

டாக்சி சேவை போல படகு சேவையை நடத்த உள்ளதால் உபேர் நிறுவனம் அளிக்கும் செயலி மூலமான சேவையை அளிப்பது குறித்தும் இந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

அடுத்த கட்டமாக ஸ்மார்ட்போனில் செயல்படும் ரோபோ மூலம் இந்த வாட்டர் டாக்ஸியை செயல்படுத்தும் திட்டமும் இந்நிறுவனத்திடம் உள்ளது.

14 அடி நீளம் 7.5 அடி அகலம் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இது மணிக்கு 29 மைல் வேகத்தில் செல்லக் கூடியது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

13 mins ago

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

50 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்