பேட்டரி பைக் தயாரிப்பில் யமஹா தீவிரம்

By செய்திப்பிரிவு

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள யமஹா, இந்தியாவுக்காக பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள யமஹா மோட்டார் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்து நாடுகளுமே மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு ஃபேம் எனும் திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிப்பதோடு பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் தவிர பிற நாடுகளில் உள்ள 100 யமஹா நிறுவன பொறியாளர்கள் பேட்டரி வாகன உருவாக்கத்துக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான் யஹமா நிறுவனம் பேட்டரி வாகனம் குறித்து இந்தியர்களிடையே கருத்து கேட்டது. இதன் அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலான பேட்டரி மோட்டார் சைக்கிளை உருவாக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுற்றுச் சூழலை காக்கும் வகையிலான மோட்டார் சைக்கிளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்