வருகிறது லம்போகினியின் பந்தய கார் எஸ்சி 18 ஆல்ஸ்டன்

By செய்திப்பிரிவு

இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான லம்போகினி சமீபத்தில் உருஸ் என்ற பெயரிலான சூப்பர் காரை அறிமுகம் செய்தது. இதையடுத்து இப்போது முழுக்க முழுக்க பந்தயத்தில் பயன்படுத்தும் ரேஸ் காரை எஸ்சி 18 ஆல்ஸ்டன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

1. இது சூப்பர் கார் டுராபியோ மற்றும் ஜிடி 3 ரேசிங் மாடலைப் போன்று உள்ளது.

2. ரேஸ் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் விரும்பும் வகையில் காரை வடிவமைத்துத் தர இருப்பதாக லம்போகினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. பந்தய மைதானத்துக்கென இது வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இதை வழக்கமான சாலையிலும் பயன்படுத்த முடியும். இது முழுக்க முழுக்க ஏரோ டைனமிக் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

4. இதன்முன்பகுதி  ஹரிகேன் ஜிடி 3 இவோ மாடலைப் போன்ற தோற்றத்துடன் உள்ளது. பக்கவாட்டு பகுதி மற்றும் காற்றை கிழித்துச் செல்லும் வகையிலான ஃபின்கள் ஹரிகேன் சூப்பர் டுரோபியோ மாடலைப் போன்று உள்ளது. இதில் மிகப் பெரிய கார்பன் ஃபைபர் விங் உள்ளது. அதேபோல காற்றை உள்ளே இழுக்க 12  பகுதிகள் உள்ளன.

5. இதில் உள்ள வி 12 மோட்டார் 770 ஹெச்பி திறன் மற்றும் 720 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை 6,750 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தக் கூடியது.  இதில் 190 கி.மீ. வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டி விட முடியும்.

6. இதில் கார்பன் பக்கெட் இருக்கை உள்ளது. இந்தக் காருக்கென பைரெலி நிறுவனம் பிரத்யேகமான டயர்களை உருவாக்கியுள்ளது. கார் சக்கரம் 20 அங்குலம் கொண்டது.  பந்தய மைதானத்தில் இதன் செயல்பாடுகளை அளவிட டெலிமெட்ரிக் சிஸ்டமும் இதில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்