வெற்றி மொழி: பென் கார்சன்

By செய்திப்பிரிவு

பென் கார்சன்

1951-ம் ஆண்டு பிறந்த பென் கார்சன் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர், ஊக்கமூட்டும் பேச்சாளர், கொடையாளி, எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. நரம்பியல் துறையில் திறன்மிக்கவர் மற்றும் பிரபலமான உலக மருத்துவர்களில் ஒருவர். இவரது முன்னோடி நுட்பங்கள் நரம்பியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நரம்பியல் தொடர்பான வெளியீடுகள் மட்டுமின்றி தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் மருத்துவ வாழ்க்கை தொடர்பான பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அமெரிக்காவின் மிக உயர்ந்த குடிமகன் விருது உட்பட பல்வேறு விருதுகள் மற்றும் பல பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

# கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாக, உங்கள் கனவுகளை உங்களால் வெல்ல முடியும்.

# நீங்கள் எந்த வழியில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யும் திறன் உங்களுக்கு உள்ளது.

# உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதில் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.

# சிறந்த செயல்களை செய்வதற்காக எனக்கான அழுத்தத்தை ஊக்கமாக நான் மாற்றிக்கொள்கிறேன்.

# அதிகப்படியான சாக்குப்போக்குகளை கண்டுபிடிப்பவர்கள், வாழ்க்கையில் தோல்வியடைபவர்களாக இருக்கிறார்கள்.

# பெற்றோராக இருப்பதைவிட முக்கியமான வேலை வேறு எதுவுமில்லை என்பதை நான் நம்புகிறேன்.

# உங்களிடமுள்ள அறிவாற்றலின் காரணமாகவே நீங்கள் மதிப்புமிக்கவராக ஆகிறீர்கள்.

# நான் உண்மையில் வேறு யாரையும்விட அதிக புத்திசாலி என்று நினைக்கவில்லை.

# நீங்கள் பில் கேட்ஸாக இருந்தாலும்கூட, உங்களுக்கான பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

# நீங்கள் தடைகளை எதிர்கொள்கிறீர்களா இல்லையா என்பதால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை, அதற்கான உங்களது எதிர்வினையின் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது.

# நாம் பெறுகின்ற விஷயங்களிலிருந்து கிடைப்பதல்ல மகிழ்ச்சி, நாம் கொடுக்கின்ற விஷயங்களிலிருந்து கிடைப்பது.

# அறிவாற்றலானது அனைத்து கதவுகளையும் திறக்கக்கூடிய திறவுகோலாக உள்ளது.

# வாசிக்கக்கூடிய மக்களுக்கு உலகத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

31 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்