சுவை மிளிரும் அறை

By ம.சுசித்ரா

வீட்டின் வரவேற்பறை, சமையலறை, பூஜை அறை, படுக்கை அறை என அறைகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அழகுபடுத்தும் வழக்கம் நம்மிடையே உள்ளது.

அந்தந்த அறைக்குத் தேவையான அலங்காரப் பொருள்களை வைத்து ரசிப்போம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி உண்டு மகிழும் சாப்பாட்டு அறையை அலங்கரிக்க ஏனோ மறந்து விடுவோம்.

“அழகான அறை, சாப்பாட்டு மேஜைகள் எங்கள் சாப்பாட்டு அறையில் இருக்கின்றன. ஆகையால் எங்கள் வீட்டுச் சாப்பாட்டு அறை அழகாகத்தான் இருக்கிறது” என்னும் பதில் உங்களிடம் இருந்தால், உங்களுக்காகத் தான் இது.

முன்பெல்லாம் சாப்பாட்டுக்கு எனத் தனியான அறை நம் பெரும்பாலான வீடுகளில் இல்லை. ஆனால் இன்றைக்கு வீடு கட்டும்போது சாப்பாட்டு அறைக்கு இடம் விட்டுக் கட்டும் வழக்கம் நம்மிடையே வந்துள்ளது.

அதிலும் இன்றைய ஃபேஷன் சமையல் அறையுடனோ வரவேற்பறை யுடனோ பகிர்ந்து அமைக்கப்பட்ட சாப்பாடு அறைதான். இதில் சில சவுகரியங்கள் உள்ளன. சாப்பாடு மேஜை, நாற்காலிகளை அருகில் இருக்கும் அறைகளுக்கு எளிதாக நகர்த்திச் செல்ல முடியும். ஆனால் அழகிய டைனிங்க் டேபிள், நாற்காலிகள் தவிற வேறொன்றும் சிறப்பாகத் தோன்றாது.

இப்படி வேறோரு அறையோடு பகிரப்பட்டு இருக்கும் சாப்பாட்டு அறையை எப்படி தனித்துக் காட்டுவது? தனித்துவம் வாய்ந்த இடமாக மாற்றுவது?

வண்ணமயமாக்குங்கள்

மேஜை, நாற்காலி தவிர சாப்பாட்டு அறையின் வண்ணம் மிகவும் முக்கியம். சாப்பாட்டு அறையின் சுவரில் கண்கவரும் வண்ணங்களைப் பூசுவதன் மூலம் மேலும் அழகுபடுத்த முடியும்.

உணவு மேஜையின் நிறம் அல்லது மேஜை விரிப்பின் நிறம் வெளிர் நிறமாக இருக்குமானால் சுவரின் நிறத்தை அடர்த்தியானதாக மாற்றுங்கள்.

உதாரணமாக, உங்கள் மேஜையின் நிறம் இளம் மஞ்சளில் இருந்தால் அதன் பின்னால் இருக்கு சுவருக்கு ஆரஞ்சு நிறம் பூசலாம் மேஜையின் இரு புறங்களிலும் இருக்கும் சுவர்களுக்கு வெளிர் பச்சை நிறம் பூசலாம்.

இது அந்த அறையைப் பிரகாசமாக்கும், சாப்பாட்டு அறையானது வீட்டின் உட்புறத்தில்தான் இருக்கும் என்பதால் சூரிய ஒளியால் சுவரின் நிறங்கள் மங்க வாய்ப்பில்லை. இந்தப் பளிர் வண்ண அறை குழந்தைகளை அதிகம் ஈர்க்கும். காலை மற்றும் மதிய உணவு அருந்த இது சிறப்பான இடமாக மாறும்.

உங்கள் மேஜை, நாற்காலிகள் பிரவுன் நிறத்தில் இருக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். மேஜை பின்னால் இருக்கும் சுவருக்கு மரூன் வண்ணம் பூசுங்கள். மேஜை, நாற்காலிகளின் நிறமும் மரூனை ஒத்த நிறத்தில் இருக்கையில் அறையில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடுத்தபடியாக, நிறைய நாற்காலிகளை அகற்றிவிட்டு எதிர் எதிர் பார்த்தபடி இரு நாற்காலிகளை மட்டும் போடுங்கள். மேஜை மீது

ஒரு வெளிர் நிற விரிப்பு போடுங்கள். அழகிய பூங்கொத்தைச் சிறிய குவளையில் அடுக்கி மேஜையின் நடுவே வைத்திடுங்கள். அறையில் மங்கலான ஒளிவீசும் ஒரு மின்விளக்கைப் பொறுத்துங்கள். மேஜையைச் சுற்றிச் சில மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள். பாருங்கள் உங்கள் சாப்பாட்டு அறை ஸ்டார் ஹோட்டலைப் போல மிளிரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

மேலும்