சென்னை ரியல் எஸ்டேட்: வளர்ந்து வரும் ரேடியல் ரிங் ரோடு

By சுந்தரி

சென்னையில் ரியல் எஸ்டேட் கொழிக்கும் பகுதியான ஜி.எஸ்.டி சாலையையும் ஓ.எம்.ஆர். சாலையையும் இணைக்கிறது பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடு. சென்னையின் அடுத்த வளர்ச்சி மிக்க பகுதி இதுதான் என RECS ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவன அறிக்கை கூறுகிறது. அதற்குச் சான்றாகப் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடின் இரு பக்கங்களிலும் தொடங்கப்பட்டுள்ள சென்னையின் முன்னணி நிறுவனங்களில் கட்டுமானப் பணிகளைப் பார்க்க முடிகிறது.

ஜி.எஸ்.டி. சாலையிலுள்ள பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து தொடங்கி இந்த ரிங் ரோடு, ஓ.எம்.ஆர். சாலை துரைப்பாக்கம் வரை கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. ஜமீன் பல்லாவரம், தர்கா ரோடு, நெமிலிச்சேரி, நன்மங்கலம், மேடவாக்கம் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பள்ளிக்கரணை என நீளும் சென்னையின் ஐ.டி. தொழில் மையமான ஓ.எம்.ஆர். சாலையில் முடிகிறது. பரபரப்பான ஓ.எம்.ஆர். சாலையைப் போல் இந்த ரிங் ரோடின் ஓரத்தில் கட்டுமானப் பணிகள் எதையும் பெரிதாகக் காண முடியவில்லை.

வியாபார நிறுவனங்களும், கடைகளும் இன்னும் பெரிதாக உருவாகவில்லை. சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் வீட்டுக் கட்டிடங்களைப் பார்க்க முடிகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் தர்கா ரோடு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றன. அந்தச் சாலையில் அடுத்தடுத்த கட்டுமானப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாராயணபுரம் ஏரியின் பின்புறம் எஸ்.கொளத்தூர் செல்லும் சாலையில் அழகழகான புதுக்குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. உதாரணமாக மேக்வொர்த் நகரில் அந்த மாதிரியான குடியிருப்புகள் பலவற்றைப் பார்க்க முடிகிறது.

எதிர்காலம் உள்ள பகுதிகள்

கீழ்க்கட்டளைப் பகுதியில், அதாவது ரேடியல் ரோடு மேடவாக்கம் சாலைப் பகுதியில் சந்திக்கும் இடத்தில் கடைகளைப் பார்க்க முடிகிறது. மேடவாக்கம் சாலையின் இருபக்கங்களிலும் புதிய நூற்றுக்கணக்கான ப்ளாட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. ப்ளாட்டுகள் விற்பனை தொடர்பான விளம்பரங்களை ரிங் ரோடின் தொடக்கத்திலிருந்தே பார்க்க முடிகிறது. தொடர்ந்து வேளச்சேரி மெயின்ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரை இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன.

அடுத்துப் பசுமையான பள்ளிக்கரணை சதுப்புநிலக்காடு இருபக்ககளிலும் விரிந்து கிடக்கிறது. அதற்கடுத்துச் சில கிலோ மீட்டர் தூரத்தில் ரேடியல் ரிங் ரோடு துரைப்பாக்கத்தில் சென்று முடிகிறது.

இந்தப் பகுதியின் வளர்ச்சி குறித்து Alliance Group நிறுவனத்தைச் சேர்ந்த பீம்மய்யா, “இந்தப் பகுதியில் இப்போது எல்லா அடிப்படை வசதிகளும் வந்துவிட்டன. கழிவுநீர் வடிகால் (Drainage) வந்துவிட்டது. பள்ளிக்கரனை சதுப்பு நிலம் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவு உள்ளது. அருகிலேயே ஏர்போர்ட் உள்ளது. மேலும் நகரத்திற்குள் போய்வர போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன” என்கிறார்.

RECS நிறுவனம் சென்னையின் ரியல் எஸ்டேட்டுக்கு எதிர்காலம் உள்ள பகுதிகள் எனப் பத்து இடங்களைப் பட்டியலிடுகிறது. அந்த தந்தப் பகுதிகளில் கிடைக்கும் அடிப்படை வசதிகளை வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. அதாவது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, கடைகள், கழிவுநீர் வெளியேறும் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகச் சொல்கிறது அந்நிறுவனம். அதன்படி சென்னையின் மற்ற பகுதிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ரிங் ரோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அடிப்படை வசதிகள்

இந்தப் பகுதியில் உள்ள வசதிகள் குறித்து, ஏகேபி டெவலப்பர்ஸின் நிறுவனரான அசோக்குமார், “இந்தப் பகுதியில் எல்லா வசதிகளும் உள்ளன. மல்டி ஸ்டோரேஜ் கட்டிடங்கள் இந்தப் பகுதியில் அதிகமான அளவில் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையின் எல்லாப் பகுதிகளிலும் இன்றைக்கு டிராபிக் பிரச்சினை இருக்கிறது.

200 அடி சாலை இருப்பதால் இந்தப் பகுதியில் டிராபிக் ஏற்படுவதற்கான சாத்தியமே இல்லை. ரேடியல் ரிங் ரோடுக்கு அடுத்தபடியாக இந்தப் பகுதியில் பல்லாவரம் தர்கா ரோட்டிலும் மக்கள் வீடு வாங்க விருப்பம் தெரிவித்துவருகின்றனர்” என்கிறார்.

இந்தப் பகுதியில் பள்ளிகளைப் பொறுத்தவரை, வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்டெல்லா மாரீஸ் பள்ளி, நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, தாயா ஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரவீந்திரா பாரதி குளோபல் பள்ளி, த சைல்ட் அமெரிக்க மாண்டிசோரி பள்ளி, டி.எஸ்.ஆர். பப்பளிக் பள்ளி, கைட் பள்ளி, ஹோலி ஃபேமிலி காண்வெண்ட், வேளாங்கன்னி வெள்ளி விழா பள்ளி உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் உள்ளன.

ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவ மகளிர் கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், ஜெருசலம்பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பாலாஜி பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளும், காமாட்சி மருத்துவமனை, சங்கரா சிறுசீரக மருத்துவமனை, அழகப்பா மருத்துவமனை, ரேடியல் ஆர்த்தோ கிளினிக் உள்ளிட்ட பல மருத்துவமனைகளும் உள்ளன.

ஐ.டி. மையமான ஓ.எம்.ஆர். சாலையையும் தொழில் தடமான ஜி.எஸ்.டி. சாலையையும் இணைப்பதால் இந்த இரு சாலைகளின் அபாரமான வளர்ச்சியைப் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடு பெறும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்