தினுசு தினுசா விளையாட்டு: நொண்டியடித்துப் பிடி!

By மு.முருகேஷ்

குழுவாக விளையாடினாலும் சில விளையாட்டுகளில் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாகத் திறமையைக் காட்ட முடியும். அப்படி ஒரு விளையாட்டைத்தான் இந்த வாரம் விளையாடப் போகிறோம்.

அந்த விளையாட்டின் பெயர் ‘நொண்டியடித்துப் பிடி’.

அதிகபட்சமாக 20 பேர் வரை சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம். விளையாடப் போகும் அனைவரும் முதலில் சம எண்ணிக்கையில் இரு குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும்.

வழக்கம் போல ‘சாட் பூட் திரி’, ‘உத்தி பிரித்தல்’ அல்லது ‘பூவா தலையா’ என மூன்று முறைகளில் ஒன்றைப் பயன்படுத்திக் குழுக்கள் பிரிந்து கொள்ளலாம். அப்புறம், இந்த விளையாட்டுக்கெனக் குழுத் தலைவரை தனியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.

விளையாட்டைத் தொடங்கும் முன்பு, விளையாட்டுத் திடல் அல்லது விளையாடும் இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டமொன்றைப் போட்டுக்கொள்ளுங்கள். இந்த வட்டம்தான் விளையாடுவதற்கான எல்லைக்கோடு. இரு குழுக்களாகப் பிரிந்தவர்களில் ஒரு குழுவினர் இந்த எல்லைக்கோட்டுக்குள் செல்லுங்கள். இன்னொரு குழுவைச் சேர்ந்தவர்கள் வெளியே நில்லுங்கள்.

இனி, விளையாட்டைத் தொடங்கலாமா?

முதலாவதாக, வெளியே இருக்கும் குழுவிலிருந்து ஒருவர் எல்லைக்கோட்டுக்குள் செல்லுங்கள்.

அப்படிச் சென்றவர் நொண்டியடித்தபடி (வலது காலை முட்டிவரை மடித்துக் கொண்டு, இடது காலை ஊன்றியபடி) உள்ளே இருக்கும் குழுவினரைத் தொட முயற்சியுங்கள்.

உள்ளே இருக்கும் குழுவைச் சேர்ந்தார்கள், நொண்டியடிப்பவரின் கைகளுக்கு அகப்படாமல் அங்குமிங்குமாய் ஓடுங்கள். ஆனால், நொண்டியடிப்பவர் விடக் கூடாது. விரட்டிச் சென்று அவர்களைத் தொட வேண்டும்.

அப்படித் துரத்திச் செல்லும்போது, நொண்டியடிப்பவர் தடுமாறி, வலது காலைத் தரையில் ஊன்றிவிட்டால் அவர் ‘அவுட்’. உடனே அவர் வெளியே செல்ல வேண்டியதுதான். பின்னர், அந்தக் குழுவிலிருந்து வேறொருவர் உள்ளே வந்து நொண்டியடித்தபடி, உள்ளே இருப்பவர்களைத் தொட முயற்சிக்கலாம்.

நொண்டியடிப்பவர் தொட்டு விட்டாலே, தொட வருபவரிடமிருந்து தப்பி ஓடுபவர் எல்லைக்கோட்டைத் தெரியாமல் காலால் மிதித்துவிட்டாலோ அவரும்

‘அவுட்’.

இப்படியாக, வெளிவட்டத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக எல்லைக்கோட்டுக்குள் சென்று, அவர்களைத் தொடுங்கள். எல்லோரையும் ‘அவுட்’ செய்துவிட்டால், வெளியே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.

வெளியே இருக்கும் குழுவினர் எல்லோரும் வந்தும், உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அவுட்டாகாமால் இருந்தால், உள்ளே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.

விளையாட விளையாட உற்சாகத்தைத் தூண்டும் இந்த விளையாட்டு. நொண்டியடிக்கும் விளையாட்டில் பல வகைகள் உண்டு. மற்ற வகை விளையாட்டுகளைப் பிறகு விளையாடலாம், சரியா?

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்