திரை விமர்சனம்: போங்கு

By இந்து டாக்கீஸ் குழு

தேவ் (நட்ராஜ்), ஜனனி (ருஹி சிங்), பாஸ்கர் (அர்ஜுன்) ஆகிய மூவரும் விலை உயர்ந்த கார்கள் விற்பனைக் கடை யில் ஊழியர்கள். எதிர் பாராத சூழ்நிலையில் கார் திருட்டுப் பழிக்கு ஆளாகி, செய்யாத குற்றத்துக்காக சிறை சென்று திரும்பு கிறார்கள். அதன்பின்னர் கார் திருட்டையே தங்கள் தொழிலாகக் கையிலெடுக் கும் அவர்களுக்கு, பத்து விலை உயர்ந்த கார்களை திருடும் வேலை கொடுக் கப்படுகிறது.

மதுரையில் நிழலுலக தாதாவாக இருக்கும் பாண் டியனின் (ஷரத் லோகித் தஷ்வா) கார்கள் அவை. யாராலும் நெருங்கமுடியாத பாண்டியனை தேவ் அணி யால் நெருங்க முடிந்ததா, அந்த கார்களை அவர் களால் திருட முடிந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.

திருட்டு எனும், என்றும் பசுமையான கதைக் களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர், கார்களைத் திருடிச் செல்லும் காட்சி களில் ‘அட’ என்று சொல்லும் விதமாக சுவாரசியமும் புத்திசாலித்தனமும் கூட்டி யிருந்தால், படத்தில் நிறைந் திருக்கும் திருப்பங்கள் இன்னும் விறுவிறுப்பைத் தந்திருக்கும். திரைக்கதை சரியான வடிவத்தில் போதிய திருப்பங்களுடன் இருக்கும்போது அதில் குத்துப் பாடல்கள் தேவை யற்ற திணிப்பு.

வில்லனுக்கு விதவித மான கார்கள் என்றால் அதி கம் பிடிக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தையும், கார்களை சொந்தமாக்கிய பிறகு அவர் எப்படி அவற்றை ரசனையாகப் பயன்படுத்துகிறார் என் பதையும் காட்டத் தவறி விட்டார் இயக்குநர். வில்லன் கதாபாத்திரத்தையும் வழக்கமான சட்டகத்துக் குள்ளேயே வடித்திருக் கிறார்.

மணியாக வரும் ‘முண் டாசுப்பட்டி’ ராம்தாஸ், வில்லனின் கிளப் நிர்வாகி யாக வரும் பாவா லட்சு மணன், கார் மெக்கானிக்காக வரும் சாம்ஸ் ஆகியோர் தரும் நகைச்சுவை விருந்து ருசிக்கிறது. அதே போல, கார் திருடும் அணியில் முதல் இரு இடத்தை வகித்தாலும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் என்று கழுத்தை அறுக்காமல் நண்பர்கள் மட்டுமே என்று காட்டியிருப்பதும் ஆறுதலான மாறுதல்.

தேவ் ஆக வரும் நட்ராஜ், கதாநாயகனுக்கான நியா யத்தைச் செய்துவிடுகிறார். ரஜினி பாணி நடிப்பை நகலெடுப்பதை குறைத் துக்கொண்டு நடிப்பில் தனது தனித்துவத்துக்கு முயற்சிக்கலாம். ருஹி சிங், அர்ஜுன் ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட வேலையை கச்சிதமாகச் செய்துள்ளனர். காந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் கொஞ்சம் அதிகமாகவே வாசித்திருக் கிறார். படத்தில் இடம் பெற்ற கார் துரத்தல், சண்டைக்காட்சிகளில் சுப்ரீம் சுந்தரின் கைவண் ணம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

திருப்பங்கள் நிறைந்த ஒரு திரைக்கதையில் சுவார சியம், தர்க்கம் ஆகிய அம்சங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி யிருந்தால் முழுமையான பொழுதுபோக்குப் படம் ஆகியிருக்கும் போங்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

21 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

41 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்