எல்லோருக்கும் ஏன் கூடாது ஐ.ஏ.எஸ் ?

By செய்திப்பிரிவு

இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல்பணி (ஐ.பி.எஸ்) இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எப்.எஸ்), இந்திய வருவாய் பணி ( ஐ.ஏ.எஸ்), இந்திய ரயில்வே பணி( ஐ.ஏ.எஸ்), இந்திய பாதுகாப்பு பணி( ஐடிஎஸ்), இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்), இந்திய தணிக்கை மற்றும் கணக்குப்பணி (ஐ.ஏ அண்ட் ஏ.எஸ்) ஆகியவை உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசே தேர்வு நடத்தி உயர் அதிகாரிகளை உருவாக்குகிறது.

அவர்கள் தங்களின் பயிற்சி முடிந்ததும் எந்த பணியில் சேர விருப்பம் என கேட்கப்படுவார்கள். மத்திய அரசுப்பணி அல்லது விருப்பமான இரண்டு மாநிலங்களை அவர்கள் குறிப்பிடலாம். இவர்கள்தான் மத்திய அரசிலும் மாநில அரசிலும் உயர்பொறுப்புகளை வகிக்கின்றனர்.

மாநில அரசின் நிர்வாகப்பணிக்கு இவ்வாறு ஒதுக்கப்படுபவர்களும் பற்றாக்குறையாக மாறும்போது மாநிலத்தில் வருவாய் துறையில் பணியாற்றுவோரில் தேவையான 90 சதவீதம் பேரை ஐ.ஏ.எஸ் அந்தஸ்து அளித்து பயன்படுத்துகின்றனர்.

மீதி 10 சதவீதம் பேரை மாநில அரசின் மற்ற துறைகளிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றி விகிதாச்சார முறைப்படி எல்லாத்துறையினருக்கும் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிப்பது என்ற நடைமுறையை மாநில அரசு அளித்தால் மற்ற ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக அமையுமே?

- எஸ்.முனியாண்டி முன்னாள் கோட்ட வளர்ச்சி அலுவலர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

9 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

23 mins ago

வலைஞர் பக்கம்

27 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

48 mins ago

மேலும்