இன்று யு.ஜி.சி. நெட் தகுதித்தேர்வு: நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

By செய்திப்பிரிவு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதித்தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 12 மையங்களில் 14,382 முதுகலை பட்டதாரிகள் தேர்வெழுதுகிறார்கள்.

ஆசிரியர் பணியில் சேர ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு நெட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. ஆண்டுதோறும் இரண்டு தடவை (ஜூன், டிசம்பர்) நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகிறார்கள். காலை 9.30 முதல் 10.45 மணி வரை பொது அறிவு தாளும், அதைத்தொடர்ந்து, 10.45 முதல் மதியம் 12 மணி வரையும் அதன்பின்னர் பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரையும் சம்பந்தப்பட்ட பாட தேர்வுகளும் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்