ஆங்கில​ம் அறிவோமே 267: சிரிப்பு சிரிப்பா வந்தாலும்…

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

வாசகர் ஒருவர் கீழ்க்கண்ட வரிகளை எழுதிவிட்டுக் கீழே ‘ஆங்கிலத்தின் அபத்தம் புரிகிறதா?’ என்று கேட்டிருக்கிறார்.

I love to win, and games I’ve won;

I seldom sin, and never son.

I hate to lose, and games I lost;

I didn’t choose, and never chost.

புரிகிறது வாசகரே, win என்பதற்கான past tense verb won. அப்படியானால் sin என்பதன் past tense son என்றுதானே இருக்க வேண்டும் (ஆனால் அது sinned). Lose என்பதன் past tense lost. இதேபோல choose என்பதன் past tense chost என்றுதானே இருக்க வேண்டும்? (ஆனால் அது chose). இதைத்தான் வாசகரின் வரிகள் உணர்த்துகின்றன. இதோ எனது எசப்பாட்டு.

I love to sing, and songs I sang;

I fling a ball, but never flang.

I strike that ball, that ball I struck;

This poem I like, but never luck.

பெரும்பாலான verbs உடன்–ed சேர்த்தால் அது past tense-க்கு மாறிவிடும். Walk – walked, return-returned, follow-followed என்பதுபோல்.

அப்படியல்லாத verbs-ஐ (win-won, lose-lost) irregular verbs என்பார்கள்.

“Face to face என்பது romance தொடர்பானதா?”

நண்பரே, இது வேறு விஷயம். திடீரென்று ஒருவரைப் பார்க்கும்போது you are coming face to face with him. முக்கியமாக நீங்கள் அச்சப்படும் ஒருவரைத் திடீரெனப் பார்ப்பதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். Face தொடர்பான வேறுசில பயன்பாடுகளையும் பார்த்துவிடுவோமே.

Put on a brave face என்றால் தைரியமாக இருப்பது அல்ல. தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வது.

உங்களது ஒரு செயல் பிறரிடையே உங்களுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகிறது அல்லது பிறரது பார்வையில் உங்களைப் பற்றிய மதிப்பீடு இதனால் குறைந்துவிடுகிறது. (நாலு பேர் நடுவில் நீங்கள் பெரும் ஒலியுடன் ஏப்பத்தை வெளியிட்டிருக்கலாம். அல்லது நீங்கள் ரகசியமாகச் செய்த ஒரு தவறான செயல் அம்பலமாகி இருக்கலாம்). இந்தச் சூழலில் You may lose face.

Keep a straight face என்றால் உள்ளுக்குள் சிரிப்பு சிரிப்பாக வந்தபோதிலும் அதை அடக்கிக்கொண்டு சீரியஸாக முகத்தை வைத்துக் கொள்வது (நாகரிகம்!).

இருபத்தி ஆறு ஆங்கில எழுத்துகளும் வரும் இரண்டு ஆங்கில வாக்கியங்களை இந்தப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். சில வாசகர்கள் வேறு இரண்டு வாக்கியங்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

How quickly daft jumping zebra vex!

Jackdaws love my big sphinx of quartz.

இப்படிப்பட்ட வாக்கியங்களை pangrams என்பார்கள்.

“Vision, ambition இரண்டு சொற்களும் ஒரே பொருள் கொண்டவையா?  எதை எங்கே பயன்படுத்துவது?”

 “Vision  சரியில்லையா?  கண் டாக்டரைப் பார்” எனலாம்.  Vision  என்பது பார்வை.  வருங்காலம் குறித்த பார்வையாகவும் இது இருக்கலாம்.  வருங்காலத்தில் ​ஐ.டி. பிரிவு விரிவடையுமா  வீழ்ச்சியடையுமா, ரோபோக்களின் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையெல்லாம் நீங்கள் கணிக்கும்போது அது vision.

Ambition என்பது ஆழமான ஆசை.  அதாவது ஓர் உயர்வை ஏதோ ஒருவிதத்தில் அ​டைய வேண்டுமென்ற குறிக்கோள்.  இது மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்.

Vision என்பது உயர்வான ஒன்று.  அதை அடைய வேண்டும் என்ற உங்கள் தீவிர உணர்வுதான் ambition.

தொடக்கம் இப்படித்தான்

“சமீபத்தில் பள்ளித்தேர்வு முடிவுகள் வெளியானபோது ஒரு மாணவி குறித்து ‘She passed with flying colours’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதற்கு என்ன பொருள்?”

மிகச் சிறப்பான முறையில் ஒன்றில் வெற்றி பெறுவதையோ ஒன்றைச் சாதிப்பதையோ pass with flying colours என்பார்கள். Her

brother passed the examination with flying colours. He will get admission in all renowned colleges.

முற்காலத்தில் போரில் வெற்றிபெற்ற கப்பல்கள் பல வண்ணங்கள் கொண்ட கொடிகளைத் தங்கள் கப்பல்களில் கட்டிக்கொண்டு நாடு திரும்பும். Flying the colours என்பது அந்தக் கப்பல் வெற்றி பெற்றது என்பதைக் குறித்தது. இதிலிருந்துதான் இது தொடங்கி இருக்க வேண்டும்.

சிப்ஸ்

# மயிலின் தோகையையும், அதன் தலைக் கொண்டையையும் ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

முறையே Train, head crest

# Vacuity என்றால்?

Vacuum - வெற்றிடம்.

# Smiling, laughing வேறுபாடு?

Smiling – புன்னகைத்தல். Laughing – சிரித்தல். Smiling-ல் பல் தெரியாது.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்