வரலாறு தந்த வார்த்தை 13: நீங்களும் ‘குதிச்சிட்டீங்களா?’

By ந.வினோத் குமார்

மல், ரஜினி, விஜய் ஆகியோர் அரசியலில் எந்நேரம் வேண்டுமானாலும் ‘குதிக்கலாம்’ என்று பலரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ‘தொபுகடீர்’ என்று ‘புரட்சித் தளபதி’ விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி போட வந்ததுதான் இந்த வார ‘குதி’கலமான செய்தி!

அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் ‘அரசியலில் குதிக்கப் போகிறேன்’ என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து குதிப்பார்கள் என்பதை மட்டும் இன்றுவரை சொல்வதில்லை.

நிற்க. இவ்வாறு, பலரைப் பார்த்துத் தானும் அவ்வாறே செய்வதை விளக்குவதற்கு ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது, இது: ‘To jump on the bandwagon’. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, ஒரு கருத்து தவறாக இருக்குபோதும், கண்மூடித்தனமாக அதை ஒருவர் ஆதரிப்பதை விளக்குவதற்கும் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தலாம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், கிராமப்புறங்களில் புதிதாக சினிமா திரையிடப்படுகிறது என்றாலோ புதிதாக நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்றாலோ அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குதிரை வண்டியில் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு, விளம்பர நோட்டீஸ்களை அள்ளி வீசிச் செல்வார்கள்.

அதேபோன்ற விளம்பர உத்தி, 19-ம் நூற்றாண்டில் வெளிநாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்டது. என்ன, சினிமா அவ்வளவாகப் பரவலாகாத அந்தக் காலத்தில் சர்க்கஸுக்குக் கூட்டம் சேர்க்க, சர்க்கஸ் கலைஞர்கள் குதிரை வண்டியின் மீது ஏறி, சகலவிதமான பேண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் வந்தார்கள். புறப்படும் இடத்திலிருந்து பேண்டு வாத்தியக் கலைஞர்களுடன் மட்டுமே வரும் வண்டியில், வழியில் ஆங்காங்கே சர்க்கஸ் கலைஞர்கள் ‘குதித்து’ ஏறிக்கொள்வார்கள். அதிலிருந்து வந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர். அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்