காமன்வெல்த்தில் இந்தியா

By செய்திப்பிரிவு

கடந்த 19 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 15-ல் இந்தியா பங்கேற்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல்முறையாக 1934-ல் பங்கேற்றது. இந்தியா பங்கேற்ற போட்டி 2-வது காமன்வெல்த் போட்டியாகும்.

2010 காமன்வெல்த் போட்டிதான் இந்தியா அதிக பதக்கங்களைக் குவித்த போட்டி. சொந்த மண்ணில் (புது டெல்லி) நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு முதல் இடம் கிடைத்தது.

2002-ல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. அதுதான் வெளிநாட்டு மண்ணில் இந்தியா அதிக பதக்கங்கள் குவித்த காமன்வெல்த் போட்டி. 2006-ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்தாலும், 2002 போட்டி அளவுக்கு பதக்கங்கள் வெல்லவில்லை.

காமன்வெல்த் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக (அனைத்து போட்டிகளையும் சேர்த்து) அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் வரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. 140 தங்கம், 124 வெள்ளி, 108 வெண்கலம் என மொத்தம் 372 பதக்கங்களைக் குவித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ரஷித் அன்வர். 1934-ல் லண்டனில் நடைபெற்ற 2-வது காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற அவர், 74 கிலோ வெல்டர் வெயிட் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காமன்வெல்த் போட்டியில் 2-வது பதக்கத்தை வென்றது இந்தியா. வேல்ஸ் தலைநகர் கார்டிப்பில் 1958-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் இந்தியாவுக்கு கிடைத்தன.

இந்தியா கடந்து வந்த பாதை

ஆண்டு - இடம் - பதக்கம்

1934 - லண்டன் - 1

1938 - சிட்னி - 0

1954 - வான்கோவர் - 0

1958 - கார்டிப் - 3

1966 - கிங்ஸ்டன் - 10

1970 - எடின்பர்க் - 12

1974 - கிறைஸ்ட்சர்ச் - 15

1978 - எட்மான்டன் - 15

1982 - பிரிஸ்பேன் - 16

1990 - ஆக்லாந்து - 32

1994 - விக்டோரியா - 24

1998 - கோலாலம்பூர் - 25

2002 - மான்செஸ்டர் - 69

2006 - மெல்போர்ன் - 49

2010 - புது டெல்லி - 101

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

42 mins ago

க்ரைம்

46 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்