IND vs SL | அறிமுகப் போட்டியில் விக்கெட் வீழ்த்தி ஷிவம் மாவி அசத்தல்

By செய்திப்பிரிவு

மும்பை: தனது அறிமுக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் ஷிவம் மாவி. அதுவும் அவர் வீசிய முதல் ஓவரில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயதான ஷிவம் மாவி வலது கை வேகப்பந்து வீச்சாளர். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணிக்காகவும், ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காகவும் விளையாடுகிறார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், மும்பை நகரின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அவர் அறிமுக வீரராக களம் கண்டார்.

அவர் வீசிய முதல் ஓவரில் பந்தை வெவ்வேறு லெந்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேனான நிசங்காவை குழப்பி இருந்தார். அதனால் அவரை க்ளீன் போல்டும் செய்தார். விக்கெட் வீழ்த்திய அந்த பந்து மிகவும் அற்புதமாக வீசப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் தனஞ்ஜெய டி சில்வா விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அவர் இதுவரையில் இந்தப் போட்டியில் இரண்டு ஓவர் ஸ்பெல் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பவர்பிளே ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அந்த அணி 163 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

11 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்