ஐசிசி-யின் சிறந்த அணியில் ஸ்மிருதி மந்தனா

By பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முறையாக இந்த ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அடங்கிய அணியை தேர்வு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இந்த அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள் ளார்.

அணியின் கேப்டனாக மேற்கிந் தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் தேர்வு செய்யப்பட்டுள் ளார். 2015 செப்டம்பர் 14-ம் தேதி முதல் 2016 செப்டம்பர் 20-ம் தேதி வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வீராங்கனைகளின் செயல்பாடுகளை வைத்து இந்த அணி தேர்வு செய்யப்பட் டுள்ளது.

இந்த காலக்கட்டங்களில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி பெண்கள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ஐசிசி சிறந்த அணியில் தேர்வாகி உள்ளனர்.

இந்திய வீராங்கனை மந்த னாவை தவிர நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ், ரச்சல் பிரிஸ்ட், காஸ்பெர்க், ஆஸ்திரேலியாவின் மேன் லெனிங், எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் ஹெதர் நைட், அன்யா ஸ்ரப்ஷோல், மேற்கிந்தியத் தீவுகளின் தியந்த்ரா டோட்டின், தென் ஆப்பிரிக்காவின் சுனே லூஸ், அயர்லாந்தின் கிம் கார்த் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அதேவேளையில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20-யின் சிறந்த வீராங்கனையாக நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் தேர்வாகி உள்ளார். பேட்ஸ் இந்த ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் 427 ரன்களும், டி 20 போட்டிகளில் 429 ரன்களும் குவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்