பகல் இரவு டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: இலங்கை 6 விக்கெட்களை இழந்து திணறல்

By செய்திப்பிரிவு

இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி பகலிரவாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 98 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 39, ஹனுமா விகாரி 31, விராட் கோலி 23, ரோஹித் சர்மா 15, மயங்க் அகர்வால் 4, ஜடேஜா 4, அஸ்வின் 13, அக்சர் படேல் 9, மொகமது ஷமி 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை தரப்பில் எபுல்டேனியா, ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. குஷால் மெண்டிஸ் 2, திமுத் கருணாரத்னே 4, லகிரு திமான் 8, ஏஞ்சலோ மேத்யூஸ் 43, தனஞ்ஜெயா டி சில்வா 10, ஷாரித்அசலங்கா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். திக்வெலா 12, எபுல்டேனியா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3, ஷமி 2, அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்