விலகுகிறார் விராட் கோலி: 2021 ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பையும் கைகழுவுகிறார்

By செய்திப்பிரிவு


2021்ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கேப்டன் விராட் கோலி நேற்று அறிவித்தார்.

கடந்த இரு நாட்களுக்குமுன்புதான், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டி20 உலகக் கோப்பைப்பைப்பின் விலகுவதாக அறிவித்த கோலி, ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் இந்த சீசனுடன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் "பிாாண்ட் வேல்யூவாக" விராட் கோலி இருந்ததால்தான், விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பினாலும், ஒரு கோப்பையைகூட வென்றுகொடுக்காமல் இருந்தாலும் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்துவந்தார். ஆனால், கோலியின் கேப்டன்ஷி மீது பல்வேறு கேள்விகள் விழத் தொடங்கியதன் விளைவு டி20 கிரிக்கெட்டிலிருந்தே தனது தலைைமயை துறக்க கோலி முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “ ஆர்சிபி அணியின் கேப்டனாக இதுதான் எனது கடைசி சீசன். ஆனால் தொடர்ந்து ஆர்சிபி அணியில் ஒருவீரராக நான் எனது கடைசி ஐபிஎல் வரை விளையாடுவேன். அனைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி.

இதுதொடர்பாக அணி வீரர்களிடம் பேசியிருக்கிறேன், என்னுட பணிச்சுமை காரணமாக சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விலகினேன். இதுவும் என் மனதில் இருந்தது. என்னுடைய முன்னோக்கிய நகர்வுகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன். எனது முடிவையும் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தி, ஆர்சிபி வீரராகத் தொடர்வேன் எனத் தெரிவித்துவிட்டேன். இது என் பயணத்தில் சிறிய நிறுத்தம்தான் முடிவு அல்ல, பயணம் தொடரும்.

இந்த வாய்ப்பை வழங்கியஆர்சிபி நிர்வாகம், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், வீரர்கள், ஆர்சிபி குடும்பம் அனைவருக்கும் நன்றி. இது எளிதான முடிவல்ல, ஆனால், நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு, அணியின் நிர்வாகத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு ” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஆர்சிபி அணியில் இடம் பெற்ற விராட் கோலி, 2013ம் ஆண்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆர்சிபி அணியில் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு தருணங்களில் அணியை மீட்டுள்ள கோலி, கேப்டனாக கடநத் 8 சீசன்களாக ஒருகோப்பையைக் கூட பெற்றுத்த ரவில்லை.


ஆனால், கோலி எனும் வர்த்தக பிம்பம், பிராண்ட், வர்த்தகரீயான பலன் ஆகியவற்றுக்காக கோலியின் தலைமையை மாற்ற எந்தவிதமான சமரசமும் இல்லாமல் ஆர்சிபி அணிதொடர்ந்து வைத்திருந்தது.

பேட்டிங்கில் கோலி ஃபார்மில்லாமல் தவித்து வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 2 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ஒருசதம் கூடஅடிக்கவில்லை.கோலி கடந்த 2 ஆண்டுகளில் 12 டெஸ்ட் போட்டிகளில் 563 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

இதுவரை 199 ஐபிஎல் போட்டிகளில்விளையாடிய விராட் கோலி 6,076 ரன்கள் குவித்துள்ளார். ஆர்சி கேப்டனாக 4,674 ரன்களை கோலி சேர்த்துள்ளார், இதில் சராசரி 43, ஸ்ட்ரைக் ரேட் 134, 38 அரைசதங்களையும் ,5 சதங்களையும் அடித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆர்சிபிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒருமுறைதான் ஃபைனல் வரை கோலி அணியைக் கொண்டு சென்றார், ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை.

கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக கடந்த சீசனில்தான் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் தகுதி பெற்றது. ஆனால், கோலியின் மோசமான கேப்டன்ஷிப்பால் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறியது.

அதிலும் கடந்த 2017, 2019-ம் ஆண்டுகளில் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி கடைசி இடத்தைப் பிடித்தது. 2018-ம் ஆண்டில் 6-வது இடம் கிடைத்தது.

குறிப்பாக 2016-ம் ஆண்டு சீசனில் 973 ரன்களை ஆர்சிபி அணிக்காக கோலி சேர்த்தார். ஆனால், அதன்பின் எந்த சீசனிலும் 500 ரன்களைத் தாண்டவில்லை. 2018-ம் ஆண்டு மட்டும் விதிவிலக்காகும்.
தற்போது நடந்துவரும் ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் இதுவரை கோலி ஒரு அரை சதம் மட்டுமே அடித்து, 33 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி 132 போட்டிகளில் 62 வெற்றிகள், 65 தோல்விகள், 3 போட்டிகள் டையிலும், 4 போட்டிகள் முடிவில்லாமலும் இருக்கிறது. வெற்றி சதவீதம் 48.04 ஆக இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

26 mins ago

கருத்துப் பேழை

48 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

56 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்