விளையாட்டாய் சில கதைகள்: முதல் போட்டியில் 6 விக்கெட்கள்

By பி.எம்.சுதிர்

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான காஸிகோ ரபாடாவின் பிறந்தநாள் இன்று (மே 25).

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க் நகரில், 1995-ம் ஆண்டு ரபாடா பிறந்தார். ரபாடாவின் அப்பா ஒரு டாக்டர் என்பதால், சிறுவயதில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். அதே நேரத்தில் ஏழைகள் மீது அதிக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தான் படித்த பள்ளிக்காகவும், தான் வசித்த பகுதியில் உள்ள ஹைவெல்ட் லயன்ஸ் கிளப்புக்காகவும் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

2014-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடிய ரபாடா, தனது முதல் போட்டியிலேயே 25 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இது இத்தொடரிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணி கோப்பையைக் கைப்பற்ற, அந்நாட்டின் முக்கிய பந்துவீச்சாளராக ரபாடா உருவெடுத்தார்.

2015-ம் ஆண்டுமுதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் ரபாடா, வங்கதேசத்துக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே 16 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் அசரவைத்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் ரபாடா, 45 டெஸ்ட் போட்டிகளில் 202 விக்கெட்களையும், 77 ஒருநாள் போட்டிகளில் 119 விக்கெட்களையும், 26 டி20 போட்டிகளில் 31 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

விளையாட்டு

40 mins ago

வேலை வாய்ப்பு

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்