டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பயஸ்-போபண்ணா ஜோடி தோல்வி: செக்.குடியரசு 2-1 என்ற கணக்கில் முன்னிலை

By பிடிஐ

இந்தியா-செக்.குடியரசு இடையி லான டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளே ஆப் டென்னிஸ் போட்டி யின் 2-வது நாளான நேற்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத் தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி கண்டது. இதனால் செக்.குடியரசு 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் நாளில் இரு ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடந்தன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றதால் 1-1 என சமநிலையில் இருந்தன.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-ரோஹண் போபண்ணா ஜோடி, செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபா னெக்-ஆடம் பாவ்லாசெக் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பயஸ்-போபண்ணா ஜோடி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர் பாராதவிதமாக இந்திய ஜோடி 5-7, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் ஸ்டெபானெக்-பாவ்லாசெக் ஜோடியிடம் தோல்வி கண்டது.

கடந்த 15 ஆண்டுகளில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் பயஸ் தோற்பது இது 2-வது முறை யாகும். இதற்கு முன்னர் 2012-ல் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான இரட்டையர் ஆட்டத்தில் தோற் றுள்ளார். அப்போதும் போபண்ணா வுடன் இணைந்துதான் ஆடினார்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளூரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் பயஸ் தோற்பது இதுவே முதல்முறை யாகும். 2000-ல் லக்னோவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் பயஸ்-சயீத் பஸ்லு தீன் ஜோடி, லெபனானின் அலி ஹம்தே-ஜிஹாம் ஜேட்டின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பயஸ்-போபண்ணா ஜோடி தோல்வி கண்டிருப்பதால் இந்தி யாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாற்று ஒற்றையர் ஆட்டம் இரண்டிலும் வென்றா லொழிய இந்தியா உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.

கடைசி நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவையும், 2-வது ஆட்டத்தில் சோம்தேவ், செக்.குடியரசின் லூகாஸ் ரோஸலை யும் சந்திக்கின்றனர். இந்த ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெற்று விட முடியாது.

கலக்கிய செக்.குடியரசு ரசிகர்கள்

நேற்றைய ஆட்டத்தின்போது இந்திய ரசிகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை செக்.குடியரசு ரசிகர்கள் நிரூபித் தனர். டேவிஸ் கோப்பை போட்டி யைக் காண டெல்லி வந்திருந்த 80 செக்.குடியரசு ரசிகர்களுடன், டெல்லியில் வசிக்கும் செக்.குடியரசைச் சேர்ந்த 20 பேரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்டியும், அவ்வப்போது குரல் எழுப்பி யும் தங்கள் அணியை உற்சாகப் படுத்தினர். சில நேரங்களில் அவர்கள் இந்திய ரசிகர்களை மிஞ் சும் அளவுக்கு ‘டிரம்ஸ்’ அடித்து அசத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கருத்துப் பேழை

25 mins ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

33 mins ago

உலகம்

40 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்