பாகிஸ்தானை 172 ரன்களில் சுருட்டிய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: யு-19 உலகக்கோப்பை முதல் அரையிறுதியில் அபாரம்

By பிடிஐ

தென் ஆப்பிரிக்காவில் நடந்துவரும் 19 வயதுக்குப்பட்டோருக்கான 50 ஓவர்கள் உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 172 ரன்களில் சுருண்டது.

டாஸ்வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ஒருவிதமான பரபரப்பு இருக்கும். அதிலும் 19 வயதுக்குப்பட்டோருக்கான போட்டியில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் என்பதால் கேட்கவே வேண்டாம் தொடக்கத்தில் இருந்த பெரும் பரபரப்பு இருந்தது.

அபாரமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி 8 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் 10 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 8 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

குறிப்பாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் பந்துவீச்சை கணித்து விளையாட முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கடுமையாகத் திணறினர்.

டாஸ்வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசீர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் மிஸ்ரா வீசிய முதல் ஓவரிலையே பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹூராரியா 4 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த பஹத் முனிரை டக்அவுட்டில் ரவி பிஸ்னாய் அனுப்பினார். 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது.

3வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் நசீர், ஹைய்தர் இருவரும் நிதானமாக ஆடி அணியைச் சிரிவிலிருந்து மீட்டனர். ஹைதர் அலி அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பின் வரிசையில் வந்த வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 26 ரன்களுக்குள் மீத மிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் நசீர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஹைதர் அலி, கேப்டன் நசீர் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்களின் கூட்டணி நிலைக்கவில்லை.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஹைதர் அலி, கேப்டன் நசீர் இருவர் மட்டுமே அரைசதம் அடித்து கவுரமான ஸ்கோர் உயர காரணமாக அமைந்தனர். இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தியாகி, யார்கர் பந்துகளையும், இன்ஸ்விங்குகளையும் மாறி மாறி திணறிடித்தார். குறிப்பாகப் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இர்பான் கானுக்கு வீசிய யார்கர் அவரின் ஸ்டெம்பை பதம்பார்த்து தனியாகத் தூக்கி எறிந்தது அடுத்ததாகக் கடைசி தாஹிர் ஹூசைன் விக்கெட்டையும் தியாகி தனது யார் பந்துவீச்சால் சாய்த்தார்.

இந்திய அணித் தரப்பில் தியாகி, ரவி பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நாடுமுழுவதும் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த எந்த முடிவும் எடுக்கவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

நியூஸி.க்கு பெரும் பின்னடைவு: ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் இல்லை- யார் கேப்டன்?

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்