நியூஸி.க்கு பெரும் பின்னடைவு: ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் இல்லை- யார் கேப்டன்?

நியூஸி.க்கு பெரும் பின்னடைவு: ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் இல்லை- யார் கேப்டன்?
Updated on
1 min read

டி20 தொடரில் 5-0 என்று வரலாறு காணாத வெற்றியை இந்திய அணி பெற்றுள்ள நிலையில் புதனன்று ஒருநாள் தொடர் தொடங்குகிறது, இதில் 2 போட்டிகளுக்கு கேன் வில்லியம்சன் ஆட மாட்டார் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகியுள்ளமை நியூஸிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டி20 தொடரில் கேப்டன்சி, பவுலிங் இரண்டிலும் சொதப்பிய டிம் சவுத்திக்குப் பதிலாக டாம் லேதம் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக 5 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மார்க் சாப்மேன் பேட்டிங்கை விட அவரது பீல்டிங் பெரிய அளவில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in