பவுண்டரிகளைக் கணக்கிட்டு உலகக்கோப்பையைத் தாரைவார்ப்பது என்ன கிரிக்கெட்டா? - காயத்தை மறக்காத கேன் வில்லியம்சன் வேதனை

By செய்திப்பிரிவு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் அணி எது என்பதைத் தீர்மானிப்பது பவுண்டரிகள் எண்ணிக்கை என்பது நிச்சயம் கிரிக்கெட் அல்ல என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நொந்து போய் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆட்டம் டை ஆக, சூப்பர் ஓவரிலும் டை ஆக இங்கிலாந்தின் 26 பவுண்டரிகளால் அந்த அணி சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது, நியூஸிலாந்து 17 பவுண்டரிகளையே அடித்திருந்தது.

“இதுதான் விதிமுறை என்பது முன் கூட்டியே தெரியும், ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியும், ஆனால் இப்படித் தோல்வியை அடைந்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்கிறார் கேன் வில்லியம்சன்.

“உண்மையில் இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று கனவிலும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் இதுதான் நடந்தது. சில வேளைகளில் சில முடிவுகள் குறித்து அமைதியாக உட்கார்ந்து சிந்திக்கும் போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இப்படி ஒரு போட்டி முடிவடைவது எனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது.

இனி இம்மாதிரி முடிவு ஏற்படக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் இது கிரிக்கெட் அல்ல, இரு அணிகளுமே இதனை ஏற்கின்றன. இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனால் என்ன செய்வது அதுதான் விதிமுறையில் உள்ளது.

இந்த பவுண்டரி விதிமுறை நிச்சயம் மாற்றத்துக்குரியதுதான்” என்றார் கேன் வில்லியம்சன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்