ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகக் கருதப்படும் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்று கைப்பற்றியதையடுத்து சாம்பியன்ஷிப் அட்டவணையில் இப்போதைக்கு முதலிடம் பிடித்துள்ளது.
2 டெஸ்ட்களில் 2 வெற்றி ஆகையால் 120 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. அதாவது ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் ஒதுக்கப்படும், அது 2 டெஸ்ட் தொடராக இருந்தாஉம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும்.
இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் இலங்கையை ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய நியூஸிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கையும் ஒரு வெற்றியுடன் 60 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 3 போட்டிகள் ஆடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் 32 புள்ளிகள் பெற்று 4, 5ம் இடங்களில் உள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் தோல்வியினால் புள்ளிகள் இல்லை. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் இன்னும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடவில்லை.
இந்திய அணிக்கு மீதமுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள்:
அக்டோபர்-நவம்பர் 2019: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் 3 டெஸ்ட்கள்
நவம்பர் 2019: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவில் 2 டெஸ்ட்
பிப்ரவரி 2020: நியூஸிலாந்தில் 2 டெஸ்கள்
டிசம்பர் 2020: ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட்கள்
ஜனவரி-பிப்ரவரி 2021: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் 5 டெஸ்ட்கள்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 min ago
இந்தியா
10 mins ago
இந்தியா
4 mins ago
இந்தியா
27 mins ago
விளையாட்டு
45 mins ago
விளையாட்டு
47 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
38 mins ago
விளையாட்டு
54 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago