சாமுவேல்ஸ் 94*; மேற்கிந்தியத் தீவுகள்-188/5

By பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள்.

மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் ஜார்ஜ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர்களான பிராத்வெயிட் 1 ரன்னிலும், டிவோன் ஸ்மித் 15 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதையடுத்து டேரன் பிராவோவுடன் இணைந்தார் மார்லான் சாமுவேல்ஸ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 65 ரன்களை எட்டியபோது பிராவோ ஆட்டமிழந்தார். 81 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த சந்தர்பால் 1 ரன்னிலும், பிளாக்வுட் 26 ரன்களிலும் வெளியேற, கேப்டன் தினேஷ் ராம்தின் களம்புகுந்தார். மறுமுனையில் ஆமை வேகத்தில் ஆடிய சாமுவேல்ஸ், 142 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் கடைசி செஸனில் சாமுவேல்ஸ் வேகமாக ரன் சேர்த்தார்.

இதனால் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது மேற்கிந்தியத் தீவுகள். சாமுவேல்ஸ் 186 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 94 ரன்களும், ராம்தின் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்