பாரத் அருண், ராபின் சிங் உட்பட 55 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி: இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்

By பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின் சிங் உட்பட 55 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரருக்கும் ரூ.35 லட்சம் வரை வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, பிசிசிஐ சார்பில் அவ்வப்போது நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் இதுவரை கோடிக்கணக்கில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 டெஸ்ட் போட்டிகளுக்குள் விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு இந்த ஆண்டு நிதியுதவி வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இதுவரை பிசிசிஐயிடம் இருந்து நிதியுதவி பெறாத மற்றும் குறைந்த அளவு நிதியுதவி பெற்ற 55 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், தேசிய தேர்வுக்குழு உறுப்பினர் டெவாங் காந்தி, முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், பந்துவீச்சு பயிற்சியாளர் டி.ஏ.சேகர், முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தையா, வேகப்பந்து வீச்சாளர்கள் சஞ்சீவ் சர்மா, சலீல் அங்கோலா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.35 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் பதவிக்கான நேர்காணலை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்