பிசிசிஐ-யை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

முன்னாள் நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செய லாளர் அஜெய் ஷிர்கே ஆகி யோரை கடந்த 2-ம் தேதி பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, பிசிசிஐ-யின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக் கும் பொறுப்பை மூத்த வழக்கறி ஞர்களான அனில் திவான், கோபால் சுப்பிரமணியம் ஆகியோரிடம் வழங்கியிருந்தது. இதன்படி இவர்கள் 9 பேர் அடங்கிய பட்டியலை சீல்வைக்கப்பட்ட உறையில் கடந்த 20-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ ஆகிய இரண்டிலும் ஒட்டுமொத்த மாக சேர்த்து 9 வருடங்கள் பதவியில் இருப்பவர்களுக்கு தடை விதிக்கும் முடிவிலும் மாற்றம் செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் இரு அமைப்பிலும் பதவி வகிப்பவர்களின் பதவிக்காலம் ஒட்டுமொத்தமாக 9 வருடங்களாக கணக்கிடப்படாது என தெளிவு படுத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது பிசிசிஐ நிர்வாகிகள் பதவிக்கு சிலரது பெயரை தாங்களும் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்க அனுமதி கோரி பிசிசிஐ சார்ப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள், நிர்வாகிகளை பரிந்து ரைக்க பிசிசிஐ-க்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் தொடர்ந்து நடை பெற்ற விசாரணையில், உச்ச நீதி மன்றம் அமைத்த சிறப்பு குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் 70 வயதை கடந்தவர்கள் இருந்ததால் அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

சிறப்பு குழுவும், பிசிசிஐ-யும் புதிய நிர்வாகிகளின் பரிந்துரை பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் தனித்தனியாக அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்த ரவிட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பிசிசிஐ-க்கான நிர்வாகிகளை பரிந்துரை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு நேற்று வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது பிசிசிஐயை நிர்வகிக்க இந்திய முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழுவில் வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குகா, பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி, ஐடிஎப்சி அதிகாரி விக்ரம் லிமாயே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அதேவேளையில் விளையாட்டு துறை செயலாளரையும் நிர்வாகி களில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ தரப்பில் அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி ஆகியோருடன் லிமாயே பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் பிசிசிஐ-யின் அன்றாட பணிகளை கவனித்துக்கொள் வதுடன், லோதா குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவ தையும் தொடர்ந்து கண்காணிக் கும்.

லோதாகுழு பரிந்துரைகள் விவகாரம் தொடர்பாக இந்த நிர்வாகக்குழு 4 வார காலத்துக் குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

30 mins ago

உலகம்

37 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்