டெய்லரின் அபார சதத்தினால் ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு

By ராமு

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி பிரெண்டன் டெய்லரின் அபார சதத்தினால் இந்தியாவுக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜிம்பாப்வேயிற்காக கடைசி போட்டியில் ஆடும் பிரெண்டன் டெய்லர் உணர்ச்சிகரமான ஒரு அபார சதத்தை எடுத்துள்ளார். 99 பந்துகளில் சதம் கண்ட டெய்லர் பிறகு அடுத்த 10 பந்துகளில் 38 ரன்களை விளாசி 110 பந்துகளில் 15 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சான் வில்லியம்ஸ் 57 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தனர்.

அதன் பிறகு டெய்லர் சில அபாரமான ஷாட்களை ஆடி தோனியின் கள வியூகத்தை முறியடிக்க, அவரும், எர்வினும் இணைந்து 13 ஓவர்களில் 109 ரன்களை 5-வது விக்கெட்டுக்காக சேர்த்தனர். அதில் எர்வினின் பங்களிப்பு 27 ரன்கள் மட்டுமே. முதலில் டெய்லர் ஆட்டமிழந்தார். தவானிடம் கேட்ச் கொடுத்து மோகித் சர்மாவிடம் அவர் ஆட்டமிழ்ஜந்தார். பிறகு கிரெய்க் எர்வினும் மோகித் சர்மாவின் அருமையான ஸ்லோ பந்துக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த 3 ஓவர்கள் ஜிம்பாப்வேயிற்கு அபாரமாக அமைந்தது. சிகந்தர் ரசா, சகப்வா இணைந்து 35 ரன்களை இந்த 3 ஓவர்களில் குவித்தனர். ஆனல் இதில் சிகந்தர் ரசா ஆதிக்கம் செலுத்தினார். மொகமது ஷமியை ஓரே ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசினார். ஆனாஅல் அதே ஓவரில் முகம்மது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து யார்க்கரை வீச பவுல்டு ஆனார். பிறகு உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வே 300 ரன்கள் செல்ல வேண்ட்ய அணி 287 ரன்களில் 48.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. மீண்டும் இந்திய பந்து வீச்சு எதிரணியினரின் முழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை புரிந்தது.

இன்றைக்கு அஸ்வின், ஜடேஜாவுக்கு சொல்லிக் கொள்ளும் தினமாக அமையவில்லை. அஸ்வின் 10 ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்து சான் வில்லியம்ஸ் விக்கெட்டை முக்கியமான தருணத்தில் கைப்பற்றினார். ஜடேஜா 10 ஓவர்கள் 71 ரன்கள் விக்கெட் இல்லை. இவர்கள் இருவரும் இணைந்து 20 ஓவர்களில் 146 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

கடைசி 6 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே 52 ரன்களுக்கு இழந்துள்ளது. தொடக்கத்தில் உமேஷ், ஷமி, மோகித் ஆகியோரின் அபாரமான ஸ்விங் மற்றும் வேகத்துக்கு 3 அருமையான பந்துகளில் ஜிம்பாப்வேயின் சிபாபா, மசகாட்சா, மிரே ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

முதல் 3 விக்கெட்டுகள் 33 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகள் 52 ரன்களுக்கு அதாவது 85 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது. இடையில் டெய்லர் 138 ரன்கள், சான் வில்லியம்ஸ் 50 ரன்கள். என்றால் இந்த இருவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தியிருந்தால் ஜிம்பாப்வே நிலைமை பரிதாபமாக அமைந்திருக்கும்.

ஆனால் டெய்லர், அஸ்வின், மற்றும் ஜடேஜாவின் தன்னம்பிக்கையை உடைத்து எறிந்தார் என்றே கூற வேண்டும். டெய்லரின் ஆட்டம் தவறுகள் இல்லதது, ஆனாலும் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ரிஸ்க் ஸ்ட்ரோக்குக்களை அதிகம் பயன்படுத்தினார். அவரது அபாரத் தன்னம்பிக்கையும், ஜிம்பாப்வேவுக்காக கடைசி ஒருநாள் போட்டியில் அவர் ஆடுகிறார் என்பதும் அவருக்கு உத்வேகம் அளித்துள்ளது.

நேற்று வங்கதேசம் 288 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை சிக்கலுக்குள்ளாக்கியதை போல் இன்று ஜிம்பாப்வே, இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்குமா என்பதை பார்க்க வேண்டும், ஆனால் அதற்கான பவுலிங் யூனிட் அந்த அணியிடத்தில் இல்லை என்றே தெரிகிறது.

இந்திய அணியில் மீண்டும் ஷமி 3 விக்கெட்டுகளைக் கைபற்ற உமேஷ், மோகித் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

5 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்