ஆஸி. அணிக்கு ஸ்மித் தேவை: ஸ்டீவ் வாஹ் கருத்து

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு காலத்துக்கு தடைவிதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தேவை என முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் திரும்ப வேண்டும். ஒரேநாள் இரவில் திறமையான வீரரை நாம் இழந்துவிட முடியாது, அவரை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும், இளம் வீரரான அவருக்கு அதிகமான எதிர்காலம் இருக்கிறது.

பந்தைச் சேதப்படுத்திய விவ காரத்தில் 3 வீரர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் ஸ்மித் கண்ணீர் மல்க மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ரசிகர் களும் அவரை மன்னித்து விட்டனர். இன்னும் ஸ்மித் மீது பேரன்பாக இருக்கிறார்கள். ஸ்மித் தான் செய்த தவறுக்கு அதிகபட்சமான விலையைக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் ஸ்மித்தை விளையாட அனுமதித்தால், வழக்கம்போல் உத்வேகத்துடனும், ரன் சேர்க்கும் ஆசையுடன் விளையாடுவார். ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்குள் மீண்டும் வரவேண்டும், ரசிகர்களும், மக்களும் ஸ்மித்தை இரு கரம் திறந்து வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், டேவிட் வார்னருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அன்பு இருப்பதாக எனக்கு தெரிய வில்லை. ஆனால், வார்னருக்கும் 2-வது வாய்ப்பு கொடுக்க வேண்டும். கொடுப்பார்கள் என நம்புகிறேன். ஸ்மித் உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் அணிக்குத் திரும்பிவந்து தங்களை நிரூபிக்கும் வரை சவாலாகத்தான் இருக்கும், மக்கள் நினைப்பதுபோல் இவர் கள் சாதிப்பது எளிதாக இருக்காது.

இவ்வாறு ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்