இதுதான் தோனி: தோற்றுப்போன ராஜஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி அசத்தல்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் ஆட்டத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஈடுபட்டது சர்ச்சையான நிலையில், போட்டி முடிந்த பின் ராஜஸ்தான் வீரர்களுக்கு தோனி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வீடியோ சிஎஸ்கே ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் 12-வது சீசனில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதியது.  இந்த ஆட்டத்தில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியபோது களமிறங்கிய தோனி, அதன்பின் நிலைத்து ஆடி வெற்றிக்கு அணியைக் கொண்டு வந்தார். ஆனால், கடைசி ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 43 பந்துகளுக்கு தோனி 58 ரன்கள் சேர்த்தார்.

பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் 5-வது பந்து சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு தோள்பட்டைக்கு மேலே சென்றது. இதற்கு ஸ்டெர்ட் அம்பயர் நோபால் கொடுத்த நிலையில், அதை லெக் அம்பயர் ரத்து செய்தார்.

நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பைப் பார்த்த தோனி, மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த நிலையில் உள்ளே வந்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. இருந்தபோதிலும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்ததும் நடந்த சம்பவங்களை மறந்துவிட்ட தோனி, எதிரணி வீரர்கள் என்றும் பாராமல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்களுக்கு போட்டியின் நெருக்கடியான கட்டத்தில் எப்படி அணுகி இருக்க வேண்டும் என்று டிப்ஸ் அளித்தார். ரஹானே, உனத்கட், திரிபாதி உள்ளிட்ட வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

களத்தில் எதிரணியைத் தோற்கடித்த நிலையிலும் கூட அவர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும், பீல்டிங் அணுகுமுறையிலும் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தோனி வகுப்பு எடுத்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை சிஎஸ்கே அணி தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் மன்கட் அவுட் செய்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின் இரு அணி வீரர்களும் போட்டி முடிந்த பின், பட்லரும், அஸ்வினும் கைகுலுக்கிக் கொள்ளாமல் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் தோனியின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

54 mins ago

க்ரைம்

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்