ஷேன் வார்னுக்கு பதிலடி கொடுக்க பேசும் கவாஜாவின் மட்டை: தொடரில் 2வது சதமடித்தார்

By செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறும் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

 

அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 3 இன்னிங்ஸ்களில் தன் 2வது சதத்தை அடித்து அபார பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஷேன் வார்ன் தான் தேர்வு செய்த ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் உஸ்மான் கவாஜாவைச் சேர்க்கவில்லை. அது தெரிந்தோ, தெரியாமலோ ஷேன் வார்னுக்குப் பதிலளிக்குமாறு இந்தத் தொடரில் 2 சதங்கள் ஒரு 90+ ஸ்கோர் ஆகியவற்றை அடித்து அசத்தினார் உஸ்மான் கவாஜா.

 

இன்று மீண்டும் இவரும், கேப்டன் பிஞ்ச்சும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 14.3 ஓவர்களி 76 ரன்களைச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஏரோன் பிஞ்ச் 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி திரும்பிய பந்துக்கு ஸ்டம்பை இழந்து பவுல்டு ஆகி வெளியேறினார்.

 

பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கவாஜாவுடன் இணைந்து ஸ்கோரை 175 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கவாஜா அரைசதம் எடுத்தவர் 102 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 100 ரன்கள் எடுத்து சற்று முன் புவனேஷ்வர் குமார் பந்தில் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், ஒன்றுமில்லாத பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார் கவாஜா.

 

உலகக்கோப்பை அணியில் இவரை பரிசீலனைக் கூட செய்யாத ஷேன்வார்னுக்கு தன் மட்டை மூலம் இந்த இன்னிங்ஸ்களில் பதிலளித்துள்ளார் கவாஜா.

 

கடைசியாக மிக முக்கிய விக்கெட்டாக கிளென் மேக்ஸ்வெலையும் ஜடேஜா வீழ்த்த ஆஸ்திரேலியா 34 ஓவர்களில் 178/3 என்று ஆடிவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்