இந்தியாவுக்கு எதிரான குறுகிய வடிவிலான தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதற்கிடையே இந்த தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் காயம் அடைந்தார்.
இந்நிலையில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர், குணமடையாததால் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிஉள்ளார். இதனால் டி 20 தொடரை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஐபிஎல் பிரபலமான ஆன்ட்ரூ டை ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆன்ட்ரூ டை இதுவரை 26 சர்வதேச டி 20 ஆட்டங்களில் விளையாடி 37 விக்கெட்களையும், 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 2-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
19 mins ago
க்ரைம்
23 mins ago
இந்தியா
21 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago