கனவு கலைந்தது: அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினார் செரீனா

By பிடிஐ

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றைய்பிரிவு காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.

24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனையான மார்கிரெட் கோர்ட் சாதனையை சமன் செய்துவிடலாம் என்ற கனவில் இருந்த செரீனாவுக்கு இந்தத் தோல்வி அதிர்ச்சியாக அமைந்தது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடந்தன. செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார் முன்னாள் சாம்பியனும் அமெரிக்க வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ்.

பரபரப்பாக 2 மணிநேரம் 10 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் செரீனாவை 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் போராடி வெளியேற்றினார் கரோலினா பிலிஸ்கோவா.

முதல் செட்டை தனக்கே உரிய ஸ்டைலில் வென்றார் செரீனா. அவரின் ஆவேசமான சர்வீஸ்கள், பந்த திருப்பி அனுப்பும் வேகம், ஏஸ்கள் ஆகியவற்றால், 6-4 என்று வென்றார்.

ஆனால், 2-வது செட்டில் செரீனாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில், பிலிஸ்கோவா விளையாடினார். இதனால், செரினா 4-6 என்ற கணக்கில் 2-வது செட்டை இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆட்டம் டைபிரேக்கர்வரை சென்ற நிலையில் 7-5 என்ற கணக்கில் செரினாவை தோற்கடித்தார் பிலிஸ்கோவா. அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஓசாகாவை எதிர்கொள்கிறார் பிலிஸ்கோவா.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும், உக்ரைன் வீராங்கனை எலினா விடோலினாவும் மோதினார்கள். இந்த ஆட்டத்தின்போது, 2-வது செட்டில் விடோலினாவுக்கு கழுத்துப் பிடிப்பும், தோள்பட்டை வலியும் ஏற்பட்டது. இதனால், சிறிதுநேரம் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாட வந்தார். ஆனால், முன்புபோல் உத்வேகம் இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தோல்வியைத் தழுவினார்.

இந்த ஆட்டத்தில் விடோலினாவை 6-4, 6-1 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா. கடந்த 1994-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பானிய பெண் ஒசாகா ஆவார். கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன் கிமோகோ டேட் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்