புஜாரா இந்திய அணியின் தூண்: சவுராஷ்டிரா கேப்டன் ஜெயதேவ் உனாட்கட் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா என்ற கடுமையான தொடருக்குப் பிறகும் அயராது ஆடும் இந்திய அணியின் சுவர் என்று கருதப்படும் செடேஷ்வர் புஜாரா காலிறுதி, அரையிறுதியில் இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி சவுராஷ்ட்ரா அணியை இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

 

பிப்ரவை 3ம் தேதி முதல் நாக்பூரில் இறுதிப் போட்டியில் கடந்த ரஞ்சி சாம்பியன் விதர்பாவை எதிர்த்து சவுராஷ்ட்ரா ஆடுகிறது.

 

இந்நிலையில் சவுராஷ்ட்ரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாட்கட் கூறியதாவது:

 

நான் லக்னோவில் உ.பி. அணிக்கு எதிராக நடைபெற்ற காலிறுதிப்போட்டியிலிருந்து இதைத்தான் கூறி வருகிறேன். அணியில் தாக்கம் செலுத்தக் கூடியதில் புஜாராவைப் போல் ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. இந்திய அணியின் தூணாகத் தற்போது திகழ்கிறார் புஜாரா. சவுராஷ்ட்ராவுக்கு நீண்ட காலமாகத் தூணாகத் திகழ்ந்து வருகிறார்.

 

எங்கள் வீரர்களுக்கு வழிகாட்ட புஜாராவைப் போல் வேறு வீரர் இல்லை என்றே கூற வேண்டும். நாங்கல் இரண்டு இலக்குகளை வெற்றிகரமாக விரட்டியதற்குக் காரணம் புஜாராவின் பேட்டிங் அதனுடன் தன்னுடன் பிறரையும் ஆடவைத்த வழிகாட்டுதல்.

 

அவர் ஆடுவது எங்களின் அதிர்ஷ்டம். இன்னும் ஒரு சிறப்பான ஆட்டம் அவருக்குப் பாக்கி இருக்கிறது (இறுதிப் போட்டி), இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

இவ்வாறு கூறினார் ஜெய்தேவ் உனாட்கட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்