ஸ்டீவ் வாஹ் மகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த வார்னர்: நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்மித்துடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சி

By பிடிஐ

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் நீண்ட இடைவெளிக்குப்பின் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் ஒரே மைதானத்தில் இருவரும் விளையாடினர்.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டபோது, கை குலுக்கி, கட்டியணைத்து தங்களின் நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்தப் போட்டியில் டேவிட் வார்னரை முன்னாள் ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டின் வாஹ் ஆட்டமிழக்கச் செய்தார்.

சிட்னி நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் என்எஸ்டபிள்யு பிரிமியர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ரான்ட்விக் பீட்டர்சன் அணியும், சதர்லான்ட் அணியும் மோதின. சமீபத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டு இருந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்தப் போட்டியில் ஒரே மைதானத்தில் எதிர் எதிர் அணிகளில் இடம் பெற்று விளையாடினார்கள்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட பின் ஸ்மித்தும், வார்னரும் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை, சேர்ந்து விளையாடவும் இல்லை. இந்த போட்டித் தொடரில்தான் ஏறக்குறைய 6 மாதங்களுக்கு பின் விளையாடியதால், இருவரையும் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் மைதானத்தில் நுழையும் போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இருவரும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் அளித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

சதர்லாண்ட் அணியில் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் ஆஸி.கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டின் வாஹ், ஷேன் வாட்ஸன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். ரான்ட்விக் பீட்டர்சன் அணியில் டேவிட் வார்னர் இடம் பெற்றார்.

50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியில், ரான்ட்விக் வீட்டர்சன் அணியில் இடம் பெற்ற டேவிட் வார்னர் 13 ரன்களில் ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டின் வாஹ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  தந்தை ஸ்டீவ் வாஹ் போலவே அவரின் மகன் ஆஸ்டின் வாஹ் மிதவேகப்பந்துவீச்சாளராக இருந்தார். அவர் வீசிய ஓவரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து வார்னர் ஆட்டமிழந்தார்.

ஷேன் வாட்ஸன் 41 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்மித் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்