10 ஓவர்கள் 9 ரன் 8 விக்கெட்: பவுலரின் சாதனையல்ல, மியான்மர் அணியின் ஸ்கோர்

By செய்திப்பிரிவு

கோலாலம்பூரில் நடந்த ஐசிசி டி20 ஆசிய மண்டலத்துக்கான தகுதிப் போட்டியில் மியான்மர் அணி 10 ஓவர்களில் 9 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து நொந்து நூலானது.

இந்த எளிய இலக்கைத் துரத்திய மலேசிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 1.4 ஓவர்களில் சேஸ் செய்தனர்.

கோலாலம்பூரில் ஐசிசி டி20 போட்டிக்கான ஆசிய மண்டலத்துக்கான தகுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் மலேசிய அணியை எதிர்த்து மோதியது மியான்மர் அணி. போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததையடுத்து, போட்டி 10.1 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற மலேசிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த மியான்மர் அணி தொடக்கத்தில் இருந்த விக்கெட்டுகளை இழந்து வந்தது. கிரிக்கெட்டின் கத்துக்குட்டிகள் விளையாடும் போட்டி இந்த அளவுக்கு மோசமாகவா இருக்க வேண்டும் என்பதுபோல் நடுவர்களையும், போட்டிநடுவர்களையும் வேதனைக்குள்ளாக்கியது.

முதல் ஓவரிலேயே மியான்மர் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது, அதன்பின் 4 ஓவர்கள்வரை மியான்மர்அணி வீரர்கள் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். ஆனால், அதன்பின் 5-வது ஓவரில் இருந்து பெவிலியனுக்கு நடைப்பயிற்சி எடுப்பதுபோல் வருவதும் போவதும் என்று இருந்தனர். 5-வது ஓவர், 6-வது ஓவரில் தலா ஒரு விக்கெட், 8-வது ஓவரில் 2 விக்கெட், 9-வது ஓவரில் 2 விக்கெட் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நிர்ணயிக்கப்பட்ட 10.1 ஓவர்களில் 9 ரன்களைச் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது மியான்மர் அணி.

மியான்மர் அணி வீரர்கள் அதிகபட்சமாகச் சேர்த்த ஸ்கோர் என்ன தெரியுமா 3 ரன்கள். இதே ஸ்கோர் உதிரிகள் எண்ணிக்கையிலும் கிடைத்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மியான்மர் வீரர்கள் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 8 விக்கெட்டுகளில் 5 வீரர்கள் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். மற்ற 3 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

மலேசியா அணி தரப்பில் பந்துவீச்சாளர் பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்வர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள், 2 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை பவன்தீப் சிங் பெற்றார்.

10 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி 1.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தித் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்