உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் வீரரை சேர்க்க லஞ்சம்- ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் வீரர்களை சேர்ப்பதற்கு ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவின் சொந்த உதவியாளர் லஞ்சம் கேட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொட ரின் சேர்மனாகவும், உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்தின் இயக்குந ராகவும் இருந்து வருபவர் ராஜீவ் சுக்லா. இவரது நிர்வாக உதவி யாளராக அக்ரம் சைஃபி என் பவர் பணியாற்றி வருகிறார். இந் நிலையில் ஹிந்தி தொலைக்காட்சி சானல் ஒன்று, அக்ரம் சைஃபிக்கும், கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நடைபெற்ற டெலிபோன் உரையாடலை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் சர்மாவை உத்தர பிரதேச அணிக்கு தேர்வு செய்வதற் காக பணம் மற்றும் சில ஆதாய மான விஷயங்களை அக்ரம் சைஃபி கேட்பது தெளிவாக உள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் குழு வின் தலைவரான வினோத் ராய், டெலி கான்பிரன்ஸ் மூலம் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா உரையாடி உள்ளார். இதைத் தொடர்ந்து அக்ரம் சைஃபியுடம் விளக்கம் கேட்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அது வரை விசாரணை ஆணையாளரை நியமிக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளதாக பிசிசிஐ உள்வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

பொதுவாக இதுபோன்ற தவறான நடத்தைகள் தொடர்பாக புகார் எழுந்தால், பிசிசிஐ-யின் விதி முறை 32-ன் படி, விசாரணை ஆணை யாளரை நியமித்து அவர், மூலம் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணை ஆணையாளர், 48 மணி நேரத்துக்குள் பிசிசிஐ பொறுப்பு தலைவரால் நியமிக் கப்பட வேண்டும். விசாரணை ஆணையாளராக நியமிக்கப் படுபவர் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அதன் அறிக் கையை பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைப்பார். இதன் அடிப்படை யிலேயே குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே விசாரணை முடிவடையும் வரை நிர்வாக உதவியாளர் பதவியில் இருந்து அக்ரம் சைஃபி தற்காலிக நீக்கம் செய்யப்படக்கூடும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. பிசிசிஐ- யின் ஊழல் தடுப்பு குழுவின் தலை வர் அஜித் சிங் கூறுகையில், இந்த ரகசிய புலனாய்வை நாங் கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். தொலைக் காட்சியிடம் இருந்து சம்பந்தப் பட்ட ஒலி நாடா கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட நபர்களிடம் நாங்கள் பேசும் வரை இந்த விவகாரத்தில் எங்களால் மேற்கொண்டு எதுவும் கூறமுடியாது” என்றார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ள வீரரான ராகுல் சர்மா இந்திய அணிக்காகவோ, மாநில அணிக்காகவோ இதுவரை விளை யாடியதில்லை. உத்தரபிரதேச அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக, அக்ரம் சைஃபி பணம் மற்றும் பிற உதவிகளை கேட்டதாக ராகுல் சர்மா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அக்ரம் சைஃபி போலி வயது சான்றிதழ் வழங்குவதாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளார் ராகுல் சர்மா.

உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் யுத்வீர் சிங் கூறுகை யில், உத்தரபிரதேச கிரிக் கெட் சங்கத்தில் வீரர்கள் தேர்வை பொறுத்தவரையில் வெளிப் படையாக நடைபெற்று வருகிறது. தனிப்பட்ட இருவரது உரையாடல் குறித்து நான் எந்தவித கருத்தும் கூற முடியாது. ராகுல் சர்மா மாநில அணியின் தேர்வுகளில் ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் அவர் நம்பகத்தன்மையும் இல்லாதவர்” என்றார்.

அணித் தேர்வுக்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிக்கி உள்ள அக்ரம் சைஃபிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்துதான் சம் பளம் வழங்கப்பட்டு வருகிறது. பிசிசிஐ-யின் அதிகாரமட்டத்தில் இருப் பவர்கள் தங்களுக்கு நிர் வாக உதவியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள் ளது. எனினும் அவர்களுக்கான சம்பளத்தை பிசிசிஐ-யே வழங்கி வருகிறது. மற்றபடி அந்த பணியாளர்களுக்கும் பிசிசிஐ-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்