உள்நாட்டு கிரிக்கெட் ஆடாமல் ஐபிஎல்-க்கு முக்கியத்துவமா? மலிங்கா மீது இலங்கை வாரியம் அதிருப்தி

By செய்திப்பிரிவு

தேசிய அணியில் தேர்வாக லஷித் மலிங்கா உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் அறிவுரையாளராக இருந்து வரும் லஷித் மலிங்கா மாகாண அளவிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆடவில்லை.

தம்புல்லா அணியில் மலிங்கா பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் மலிங்கா அணியுடன் இணையவில்லை, மாறாக ஐபிஎல் கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருந்து வருகிறார்.

ஜூலை-ஆகஸ்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் மலிங்கா அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் மலிங்கா உள்நாட்டுத் தொடரை புறக்கணித்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

ஆனால் மலிங்க கூறுவதென்னவெனில், “மும்பை இந்தியன்ஸுடன் என் பணி மே 25-26-ல் நிறைவடையும். அதன் பிறகு நான் பயிற்சி எடுக்கும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருக்கிறேன். ஆட்டங்களிலும் ஆடுகிறேன், நான் நன்றாக ஆடினால் தேர்வுக்குழுவினர் திருப்தி அடைந்தால் என்னைத் தேர்வு செய்யட்டும்” என்றார்.

இலங்கை டி20 அணியில் மலிங்கா ஓரங்கட்டப்படுவதால் இவருக்கும் இலங்கை வாரியம் மீது அதிருப்தி நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்