ஐபிஎல் டி20: மும்பைக்கு 3-வது தோல்வி

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 3-வது தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

முன்னதாக மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 53, எவின் லீவிஸ் 48, இஷான் கிஷண் 44, கேப்டன் ரோஹித் சர்மா 18, கிருணால் பாண்டியா 11 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் டிரென்ட் பவுல்ட், கிறிஸ்டியன், தெவாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் 15 ரன்களில் வீழ்ந்தார். ஆனால் ஜேசன் ராயும், ரிஷப் பந்தும் விளாசித் தள்ளினர். பந்த் 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேஸன் ராய் 53 பந்துகளில் 91 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 27 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜேஸன் ராய் 6 சிக்ஸர்களை, 6 பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதையடுத்து டெல்லி தனது முதல் வெற்றியை இந்த சீஸனில் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் மும்பை அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியைக் கண்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்