‘உன் பையனை இந்தப் பக்கம் வரச் சொல்லாத!’ - அர்ஜெண்டினா கால்பந்து ஸ்டாருக்கு கொலை மிரட்டல்

By ஆர்.முத்துக்குமார்

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்செல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஒரு கும்பல். ரொசாரியோவில் உள்ள குற்றங்களுக்குப் பெயர் பெற்ற கும்பல் ஒன்று ஏஞ்செல் டி மரியாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் நகரமான ரொசாரியோவிலிருந்துதான் உலகக் கோப்பை வெற்றி கேப்டன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் வந்துள்ளார். ஆனால் இந்த ஊர் பெரும் வன்முறைக்கும் குற்றங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இப்போது ஏஞ்செல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

ரொசாரியோவில் உள்ள குற்றங்களுக்குப் பெயர் பெற்ற கும்பல் ஒன்று ஏஞ்செல் டி மரியாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. திங்கட் கிழமை காலை ஏஞ்செல் டி மரியாவின் வீட்டில் ஒரு துண்டுக்காகிதம் வீசப்பட்டுள்ளது. அதில் ஏஞ்செல் டி மரியா மற்றும் அவர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டிருந்தது.

2022 உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டின அணியின் பிரதான பங்களிப்பு நட்சத்திர வீரர் ஆன ஏஞ்செல் டி மரியா ரொசாரியோவுக்கு வரக்கூடாது மீறி வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த துண்டுக்காகிதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

“உன் மகன் ஏஞ்செலிடம் சொல்லி வை, ரொசாரியோ பக்கம் அவன் வரக்கூடாது, மீறி வந்தால் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விடுவோம். உன்னை கவர்னர் புல்லாரோ கூட காப்பாற்ற முடியாது நாங்கள் பொதுவாக காகித மிரட்டல் விடுப்பவர்களல்ல, புல்லட்களையும் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அப்படியே விட்டு விட்டு வருபவர்கள். ” என்று அந்த துண்டுக்காகிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா போலீஸ் துறையும் வழக்கறிஞர்களும் இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். அதாவது டி மரியா தனது லோக்கல் கிளப்புக்கு விளையாட ரொசாரியோ திரும்பினால் நிச்சயம் கொலை விழும் என்று மிரட்டப்பட்டுள்ளது.

ஏஞ்செல் டி மரியா சமீபத்தில் போர்ச்சுக்கள் பென்ஃபிகாவில் கூறும்போது ,தனது பதின்பருவ கிளப்பான ரொசாரியோ செண்ட்ரல் அணிக்கு தான் ஆடப்போவதாகத் தெரிவித்திருந்தார். ஏஞ்செல் டி மரியா தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார்.

டி மரியாவுக்கு விடுத்த கொலை மிரட்டல் ரொசாரியோவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை மருந்து புழக்கத்தில் நம்ப 1 இடத்தில் இருப்பது ரொசாரியோ. போதை மருந்து கள்ள வியாபாரிகள் குழுக்களிடையே அடிக்கடி மோதல், கொலை, வன்முறைகள் என்று ரத்தக்களறி அதிகம் நிகழும் இடமாகும்.

இந்த ஊரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு 22 பேர் கொலை செய்யப்படுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். அர்ஜெண்டீனா மொத்தத்திற்கும் ஒரு லட்சம் பேருக்கு 4.5 பேர் கொல்லப்படுகின்றனர், என்றால் ரொசாரியோ வன்முறை மற்றும் பயங்கரத்தில் எங்கு இருக்கிறது என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஓராண்டுக்கு முன்பு லியோனல் மெஸ்ஸியின் உறவினர் ஒருவர் வைத்திருக்கும் சூப்பர் மார்க்கெட் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதோடு, ‘மெஸ்ஸி உனக்காகத்தான் காத்திருக்கிறோம்’ என்று மிரட்டல் செய்தியும் விட்டு விட்டுச் சென்றனர்.

ரொசாரியோவை வன்முறையிலிருந்து மீட்க ஆயுதப்படையிடம் நகரத்தை ஒப்படைக்கலாமா என்று அர்ஜெண்டினா அரசு மசோதா ஒன்றையும் காங்கிரஸுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்