காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்

By செய்திப்பிரிவு

20-வது காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சுகேன் தேய் மற்றும் வீராங்கனை சஞ்சிதா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கிய 20-வது காமன்வெல்த் போட்டியின் முதல் நாள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

48 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான பளுத்தூக்குதல் போட்டியில், இந்தியாவின் சஞ்சிதா தங்கப் பதக்கத்தையும், மிராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆடவர் பிரிவின் 248 கிலோ எடைப்பிரிவில் சுக்கன் தேய், தங்கப் பதக்கத்தை வென்றார். தேய், 2010- ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் , கடந்த 2013 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 6 தங்கம், ஆஸ்திரேலியா 5 தங்கம், ஸ்காட்லாந்து 4 தங்கம் பெற்றுள்ளன. இதில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்