கடனில் இருந்து மீட்டெடுக்கும் கால பைரவாஷ்டகம்; கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்டமி பைரவ வழிபாடு! 

By வி. ராம்ஜி

ஸ்ரீஆதிசங்கரர், இந்த உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம். அவற்றில், கால பைரவாஷ்டகமும் ஒன்று. சக்தி வாய்ந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேய்பிறை அஷ்டமியிலும் பாராயணம் செய்யுங்கள். தீராத நோயும் தீரும். வாழ்க்கையில் இதுவரை இருந்த கஷ்ட நிலைகளில் இருந்து மீள்வீர்கள். குறிப்பாக, கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

ஸ்ரீகால பைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥


பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
நிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥


பொதுவாக, அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்வது சிறந்தது. என்ற போதும், தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வழிபட மிகவும் உகந்தது. அஷ்டமியில் விரதமிருந்து, பைரவரைத் தொழுதால், வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் முதலானவை அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆலயம் திறந்திருக்கும் காலத்தில், பைரவருக்கு வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். மிளகு கலந்த சாதம், தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், இருந்த துன்பங்கள் அனைத்தும் பனி போல் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணத் தடைகள் நீங்க அருள்புரிவார் பைரவர். புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம். நல்ல வேலை கிடைக்க அருளுவார். ஸ்ரீபைரவரை ஞாயிற்றுக் கிழமைதோறும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தாலும் மகத்தான பலன்கள் கிடைக்கப் பெறலாம்.

தேய்பிறை அஷ்டமியிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பைரவாஷ்டகம் சொல்லி, பைரவரை வணங்கி, தெரு நாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ வழங்குங்கள். வாழ்வில் உன்னத நிலையை அடைவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

34 mins ago

க்ரைம்

38 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்