சுக்கிர ஏகாதசியில் துளசி தீர்த்தம்! 

By செய்திப்பிரிவு


ஏகாதசி நாளான இன்று, திருவேங்கடத்தானை, மகாவிஷ்ணுவை வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படங்களுக்கு துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தவர்கள் , பெருமாளை விரதமிருந்து வணங்கி வழிபடலாம். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழும்; ஆரோக்கியமாக வாழலாம். இன்று 20.03.2020 வெள்ளிக்கிழமை, ஏகாதசி. சுக்கிர ஏகாதசி.

ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதி. அதனால்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறோம். விரதம் இருந்து கொண்டாடுகிறோம். மாதங்களில் நான் மார்கழி என்று மாலவன் சொன்னதால், மார்கழி ஏகாதசி, மகத்துவம் வாய்ந்ததாக ஞானநூல்கள் விவரிக்கின்றன.

பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பேர், மாதந்தோறும் வருகிற ஏகாதசியில், தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை ஸேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.


ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த அற்புதமான நன்னாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது உறுதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்