வார ராசி பலன் | 20-03-14 முதல் 26-03-14 வரை - (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திர சேகர பாரதி

துலாம்

சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவு திருப்தி தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பழைய வாகனத்தைப் புதுப்பித்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் உருவாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருள் கொடுக்கல் - வாங்கல் இனங்கள் லாபம் தரும். சுகம் கூடும். 28 முதல் புதன் 6ஆமிடம் மாறுவதால் எதிர்ப்புக்கள் விலகும். 31 முதல் சுக்கிரன் 5ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம். l எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்துகொள்ளவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.



விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடத்திலும் சுக்கிரன் 3-லும், புதன் 4-லும் கேது 6-லும் உலவுவது சிறப்பாகும். சனி 12இல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, கலை, சிற்பம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

30, 31ஆம் தேதிகளில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் சற்று கூடும். மக்களால் முக்கியமான எண்ணம் ஈடேறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 31ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. l எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: குருப் பிரீதி செய்யவும். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றவும்.



தனுசு

உங்கள் ராசிக்கு 2இல் சுக்கிரனும் 7இல் குருவும் 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். முக வசீகரம் கூடும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். பேச்சில் இனிமை தவழும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.

திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாய்த் திகழும். தகவல்தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். உடன் பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் பல ஏற்படும். பெரியவர்களது ஆசி கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, பொன் நிறம். l எண்கள்: 3, 4, 6, 8, 9.

பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் பிள்ளையாரையும் வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவி செய்யவும்.



மகரம்

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2இல் புதனும் 3இல் சூரியனும் 10இல் ராகுவும் உலவுவதால் தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகமாகும். கலைத்துறையினருக்குப் புகழோடு பொருளும் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்தி காணலாம். பேச்சில் திறமை வெளிப்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பெண்களுக்கு உற்சாகமான போக்கு நிலவிவரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.

அரசுப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். 28ஆம் தேதிமுதல் புதன் 3ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிகம் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் மட்டுமே ஈடுபடுவது நல்லது. 31 முதல் சுக்கிரன் 2ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலை மேலும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு, ஆரஞ்சு, பச்சை. l எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகருக்கும் முருகனுக்கும் அர்ச்சனை செய்யவும். குரு வழிபாடு அவசியமாகும்.



கும்பம்

3இல் கேதுவும், 5இல் குருவும், 12இல் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புக்கள் குறையும். சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கை வசதிகள் கூடும். உடல்நலம் சீராகும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். திடீர்ப் பொருள் வரவுக்கும் இடமுண்டு. ஆன்மிக ஈடுபாடு கூடும். இதர கிரக நிலை சிறப்பாக இல்லாததால் பேச்சில் நிதானம் தேவை.

தந்தை நலனிலும், சகோதர நலனிலும் அக்கறை தேவை. 28ஆம் தேதி முதல் புதன் 2ஆமிடம் மாறுவதால் ஜலப் பொருட்கள் லாபம் தரும். வியாபாரம் சூடுபிடிக்கும். 31ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் புதிய பொருட்கள் சேரும். மன உற்சாகம் பெருகும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27 (இரவு), 28, 30.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம். l எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும்.



மீனம்

உங்கள் ராசிக்கு 11இல் சுக்கிரன் உலவுவது மட்டுமே சிறப்பாக உள்ளது. இதர கிரகநிலை திருப்திகரமாக இல்லாததால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரத்தில் அதிக முதலீடுசெய்ய வேண்டாம். அன்றாடப் பணிகளிலும்கூட எச்சரிக்கையுடன் ஈடுபடவும். அலட்சியம் கூடாது. குடும்ப நலனில் கவனம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

கெட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது 28ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. 31ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் இந்த வாரம் முழுவதும் கலைத் துறையினருக்கு சிறப்பாக அமையும். பெண்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27 (பகல்), 30. திசை: தென்கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை. l எண்: 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரகங்களுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்