இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் தேடிவரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
**
ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள்.
**
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்களுடன் நட்பு மலரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
**
கடகம்: சிலரது விமர்சனங்கள், கேலிப் பேச்சுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
**
கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும்.
**
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
**
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் வந்துபோகும்.
**
தனுசு: துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான சேதி வரும்.
**
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். பழைய கடனை வசூலிப்பீர்கள். தீராத பிரச்சினைக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
**
கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக்கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.
**
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் அவசியம். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
**********

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

31 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்