சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: தெலங்கானாவில் 15 பெண் தொழிலாளர்கள் பலி

By என்.மகேஷ் குமார்

தெலங்கானாவில் நேற்று டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பெண் தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் ஆந்திராவில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டம், வேமுல கொண்டா பகுதியைச் சேர்ந்த 30 பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று காலை டிராக்டரில் பக்கத்து கிராமத்தில் கூலி வேலை செய்ய கிளம்பினர். அப்போது லட்சுமாபுரம் என்ற இடத்தில் டிராக்டர் வேகமாக வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிராக்டரை ஓட்டுநர் இடதுபுறம் திருப்பியுள்ளாரர். கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பெண் கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் 9 பேர் பலி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் நந்தியாலத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது, ஓர்வகள்ளு எனும் இடத்தில், 14 பேரை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோ, முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்திச் சென்று வேகமாக அரசு பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மகாநந்தி எனும் இடத்தை காண சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று ஒரே நாளில் நடந்த சாலை விபத்துகளில் இறந்த மொத்தம் 24 பேரில் 22 பேர் பெண்கள். இந்த விபத்துக்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் அம்மா, மகள், பாட்டி, மாமியார், மருமகள், கணவன், மனைவி என உறவுகள். சடலங்களைக் கண்டு உறவினர்கள் மட்டுமல்லாது, அங்கிருந்த கிராம மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 min ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

49 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்