ஆர்.சிவகுமாருக்கு மரியாதை!

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

பதிப்பும் வாசிப்பும் அது சார்ந்த அறிவு, பொருளியல் வளங்களும் குறைவாக இருந்த காலகட்டத்தில் ஆத்மார்த்தத்துடன் மொழிபெயர்த்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஆர்.சிவகுமார். வாசகன் மீது மொழிபெயர்ப்பாளன் வன்முறை செலுத்தாத படைப்புகள் என்று ஆர்.சிவகுமாரின் மொழிபெயர்ப்புகளைச் சொல்லலாம். அவரது நாற்பத்துச் சொச்சம் ஆண்டுகள் பங்களிப்பு குறித்து கவிஞர் வே.பாபுவின் ‘தக்கை’ இதழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. இன்றுவரை சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்த அர்ப்பணிப்புடனும் அழகியல் நம்பிக்கையுடனும் இயங்கிவருபவர் சிவகுமார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் அவரது பங்களிப்புகளை நேர்மையாக மதிப்பிடுபவை. கவிஞர் சுகுமாரன், சிவகுமார் குறித்த ஒட்டுமொத்த மதிப்பீட்டைத் தருகிறார். சிவகுமார் மொழிபெயர்த்த ‘இலக்கியக் கோட்பாடு’ அறிமுக நூல் குறித்த கவிஞர் சபரிநாதன் எழுதிய கட்டுரை, சிவகுமாரின் மொழிபெயர்ப்பைத் தாண்டியும் பேசுகிறது. காஃப்காவின் புகழ்பெற்ற கதையான உருமாற்றத்தை சிவகுமார் மொழிபெயர்ப்பு செய்த விதத்தை, மொழிபெயர்ப்பு சார்ந்து அவர் பயன்படுத்திய உத்திகளை அவரது மார்க்சிய சார்பு நிலையைச் சுட்டி துல்லியமாக உதாரணங்களோடு கவிஞர் பெருந்தேவி பகிர்ந்துகொள்கிறார். தமிழில் படைப்பிலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் அதன் விளைவுகள் சார்ந்த நம்பிக்கையையும் இந்நூல் தருகிறது. தீவிரத்துக்கும், பொழுதுபோக்குக்கும், மேலோட்டத்துக்கும் ஆழத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆடம்பரத்துக்குமான எல்லைகள் வேகமாக அழிக்கப்பட்டு வரும்நிலையில் ஆர்.சிவகுமார் போன்ற ஆளுமைகளைப் பற்றிய பேச்சுகள் அவசியமானவை.

மொழிகளின் உருமாற்றம்

ஆர்.சிவகுமாரின் மொழிபெயர்ப்பு:

சில பார்வைகள்

தக்கை பதிப்பகம்

விலை: ரூ.100

 9865153007

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

41 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்