தொடுகறி: பிரியாணி ஜாலக்காரர் யவனிகா!

By செய்திப்பிரிவு

பிரியாணி ஜாலக்காரர் யவனிகா!

லகமயமாதல் காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளின் மக்களின் வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் ஏற்படும் மாற்றங்களைத் தன் கவிதைகளில் பதிவுசெய்தவர் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். ‘கடவுளின் நிறுவனம்’ என்ற பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் ஒரு கவிஞனின் உலக, கலாச்சார, அரசியல் பார்வை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பிப்பவை. தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாள நண்பர்களின் சுகதுக்கங்களில் பங்குகொள்ளும் நண்பர் இவர். சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளில் சிறுவியாபாரியாகப் பயணித்த அனுபவங்களை அருமையாகப் பகிர்ந்துகொள்ளும் கதைசொல்லியும்கூட. இதற்கெல்லாம் மேலாக எத்தனை பேர் என்று சொல்லி, அவர் சொல்லும் சாமான்களையும் வாங்கிக்கொடுத்துவிட்டால் கட்டாந்தரையிலும் அடுப்பூக்கூட்டி அருமையான திண்டுக்கல் பிரியாணியை இரண்டு மணி நேரத்தில் செய்துவிடும் ஜாலக்காரர்.

அகரமுதல்வனும்

அரவிந்த நீலகண்டனும்

பு

லம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான அகரமுதல்வன் எழுதியிருக்கும் ‘பான் கீ மூனின் றுவாண்டா’ நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அகரமுதல்வன், விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதப்பட்ட படைப்புகளை நிராகரிப்பவர். இந்துத்துவவாதியும் வலதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டன் தலைமையில் அவரது நூல் வெளியீட்டு விழா நடைபெறுவது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

வடக்கேயும் ஒளிரும்

திராவிடச் சூரியன்

தி

ராவிட இயக்க நூற்றாண்டை இந்தியாவின் பிற மாநில அறிவுஜீவிகள் கண்டுகொள்ளாத வேளையில், அது குறித்த முக்கியமான கருத்தரங்கம் வரும் ஜனவரி 3, 4-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கவிருக்கிறது. பார்த்தா சாட்டர்ஜி, சுதிப்தா கவிராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து ஜி.அலாய்சியஸ், எஸ்.ஆனந்தி, வ.கீதா, ஜெ.ஜெயரஞ்சன், ஏ.எஸ். பன்னீர்செல்வன், ஆர்.விஜயசங்கர், சுந்தர்காளி, ராஜன்குறை, ரவி ஸ்ரீராமச்சந்திரன், ஏ.கலையரசன், கார்த்திக் ராம் மனோகரன் உள்ளிட்ட ஆளுமைகளும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

47 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்