காங். தலைவராக விரைவில் ராகுல் காந்தி பொறுப்பேற்பார்: மல்லிகார்ஜூன கார்கே தகவல்

By இரா.வினோத்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க இருக்கிறார். அவரது தலைமையில் வரும் மக்களவை தேர்தலை சந்திப்போம் என்று காங்கிரசின் மக்களவை கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் யாதகிரியில் மல்லிகார்ஜூன கார்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை புரிந்துகொண்ட ஆர்எஸ்எஸ் மோடியை இப்போது விமர்சிக்க தொடங்கியுள்ளது.

இப்போது காங்கிரஸ் துணைத்தலைவராக இருக்கும் ராகுல் விரைவில் கட்சித் தலைவராக பொறுப்பேற்பார். அவரது தலைமையில் வரவிருக்கிற சட்டப்பேரவை, மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சமூக ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு ராகுல் காந்தி வேகமாக முன்னேறி வருகிறார். ராகுல் காந்தியின் பாய்ச்சலை குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் மூலம் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்