பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பட்டியலிட்டு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியுள்ளதா? இட ஒதுக்கீடு என்பது எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கோட்பாட்டை மீறுகிறதா? இட ஒதுக்கீடு என்பது மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அரசு தரப்பானது 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கெனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை தாண்டி வழங்கப்படுவது அல்ல. இது தனிப்பட்ட ஒதுக்கீடு என்று விளக்கமளித்தது. இதற்காக கல்வி நிறுவனங்களில் 25% இடங்களை அதிகரிப்பதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. இந்நிலையில் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்